குருவோடு சேரும் சுக்கிரன் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

guru sukiran
- Advertisement -

ஜோதிட சாத்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் இடமாற்றமும் 12 ராசிக்காரர்களுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர். சுக்கிரன் அதே போல் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர்களின் செயற்கையால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்களை பற்றி தான் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடிய குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவானும் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார். ஏப்ரல் 24 தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் பெயருகிறார்.

- Advertisement -

அதாவது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு ஏப்ரல் 24ஆம் தேதி சுக்கிரன் பகவான் ஒன்று சேர்கிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாக ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குரு சுக்கிர சேர்க்கையால் பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

மேஷ ராசி

சுக்கிரன் குரு சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு பலவிதமான ஏற்றங்களை தரப் போகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து முன்னேற்றம் உருவாகும். பணம் சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதோடு பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

- Advertisement -

ரிஷப ராசி

குரு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை அள்ளி பருகப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான். பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடக ராசி

குரு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால் ஆடம்பர வசதிகளை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். காரியத்தில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். எதிர்பாராத நேரத்தில் நண்பர்களால் உதவி கிடைக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பணவரவு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குரு ஆதித்ய ராஜயோகத்தல் அதிஷ்டம் பெற போகும் ராசிகள்

குரு சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட கணிதத்தில் உள்ள பொதுவான தகவலின் படி தொகுக்கப்பட்டவை தான். இதிலும் சிறிசில மாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -