சும்மா பேட் சுத்துனா சிக்ஸ் போச்சு. அதனால நான் அவரையே டார்கெட் பண்ணி அடிச்சேன் அணிக்கு வெற்றியும் கிடைச்சாச்சு – மேக்ஸ்வெல் ஹேப்பி

Maxwell

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

இந்த போட்டியின் வெற்றிக்குறித்து பேசிய மேக்ஸ்வெல் : இந்த போட்டியில் எங்களது அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. எனக்கு 4ஆம் இடத்தில் களமிறங்கி ஆடுவது சவுகரியமாக இருக்கிறது. நடு ஓவர்களில் எனது பாட்னர்ஷிப் நன்றாக இருந்தது. மேலும், க்ருனால் மற்றும் பும்ரா சிறப்பாக வீசினர். அவர்களின் ஓவரை அடிக்கமுடியாததால் நான் சாஹல் ஓவரை டார்கெட் செய்தேன்.

chahal

அவரது ஓவரில் பேட்டை சுழற்றும் போது சரியாக படகூடவில்லை ஆனால், பந்து சிக்ஸர் சென்றது. நான் அவுட் ஆன பிறகு கடைசியா பைனல் ஓவரில் சிறப்பாக வெற்றிக்கான ரன்னை எங்களது வீரர்கள் அடித்தது உண்மையில் மகிழ்ச்சி. வெற்றி வெற்றியே அடுத்த போட்டியிலும் இது தொடரும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

இவரது ஆட்டமே அணி தோல்விக்கு காரணம். அங்கேயே ஆட்டம் நமது கைகளில் இருந்து சென்றது – விராட் கோலி விரக்தி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்