- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமே மாதத்தில் ஐஸ்வர்யம் பெருக

மே மாதத்தில் ஐஸ்வர்யம் பெருக

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் பிறக்கும் பொழுது அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எதுவுமே இந்த மாதத்தில் ஏற்படக்கூடாது என்றும் நினைப்போம். அதேபோல் நல்ல சிறப்பான முன்னேற்றகரமான மாதமாக இந்த மாதம் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மே மாதத்தில் ஐஸ்வர்யம் பெருக

ஒவ்வொரு மாதம் தொடங்கும் பொழுதும் நாம் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் அந்த மாதத்தில் தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அதேபோல் தான் அந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய பெண் தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது வளர்பிறை பஞ்சமி திதியோடு வருகிறது என்பதால் இதற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.

- Advertisement -

இந்த நாளில் கண்டிப்பான முறையில் நாம் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த அம்மன் ஆலயத்தில் கண்டிப்பான முறையில் கோபுரம் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்தில் கோபுரம் இருக்காது. அதனால் சற்று பெரிய அளவில் கோபுரம் இருக்கும் வகையில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அப்படி செல்லும் பொழுது அம்மனுக்கு மலர்களையும், மஞ்சள், குங்குமத்தையும் வாங்கி கொடுத்து அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு ஆலயத்தை விட்டு வெளியே வருவோம் அல்லவா? அவ்வாறு ஆலயத்திற்கு வெளியே வந்த பிறகு திரும்பி கோபுரத்தை பார்த்து பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 9 முறை மட்டும் கூறினால் போதும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சக்தி பராசக்தி மமவசம் வசி வசி”

பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தின் கோபுரத்தை பார்த்து இந்த மந்திரத்தை 9 முறை மட்டும் முழு மனதோடு யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் ராசியான மாதமாகவும், சிறப்பான மாதமாகவும், மங்களங்கள் தரும் மாதமாகவும், ஐஸ்வரியம் நிறைந்த மாதமாகவும் திகழும்.

இதையும் படிக்கலாமே:வளர்பிறை பஞ்சமி தீப வழிபாடு

ஆலய வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியத்தை தரும். அந்த வகையில் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மன் ஆலயத்தின் கோபுரத்தை பார்த்து இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு மே மாதம் ஐஸ்வர்யம் நிறைந்த மாதமாக திகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்