ஜோதிடம் : மே மாத ராசி பலன் – 2019

May Matha pala

மேஷம்:
Mesham Rasi

கணவன், மனைவிக்கிடையே அன்பு, பாசம் மேலோங்கும். உறவினர் வருகையால் நன்மைகள் ஏற்படும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இதுநாள் வரை தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.பெண்கள் குடும்பத்துடன் வெளியூரில் இருக்கும் புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இந்த மாதம் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.மாணவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்:
Mithunam Rasi

முன்னேற்றம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவு ஏற்படும். பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நாடி வருவார்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் சதியை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். வீட்டில் அவ்வபோது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சிலருக்கு வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழிலதிபர், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடனுதவி போன்றவை எளிதாக கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்:
simmam

பொருளாதார வளம் மேம்படும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். புத்தாடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். கணவர் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் விரயம் ஏற்படலாம். போட்டி வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.

கன்னி:
Kanni Rasi

மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அடுத்தடுத்து பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது. பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் உதவிகரமாகச் செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பாராத பதவி உயர்வு வந்து சேரும்.

துலாம்:
Thulam Rasi

தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து அன்பு பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் பெரியவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களின் சூழ்ச்சிகளை உடைத்து, வளர்ச்சி காண்பீர்கள். கலைஞர்களுக்கு தாமதங்களும், வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.

விருச்சிகம்:
Virichigam Rasi

இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை உண்டாகும். நினைத்தது எல்லாம் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சி சாதகமாக முடியும்.ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்பட்டாலும், அவர்கள் வகையில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். எதிர்பாராத லாபங்களுக்கு வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi

சுபச் செலவுகள் அதிகரிக்கும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்களின் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது அவசியம். கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

கும்பம்:
Kumbam Rasi

பொருளாதார வளம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். பகைவரின் சதியை முறியடித்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். மாணவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம்.

மீனம்:
Meenam Rasi

சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும். எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மனதில் தேவையில்லாத சஞ்சலமும், அதனால் கவலை யும் ஏற்பட்டாலும் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விசேஷங்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have May month Rasi palan in Tamil or May matha Rasi palangal in Tamil. This May month Rasi palangal covers Mesham to Meenam Rasi.