மே மாத ராசி பலன்கள் – 12 ராசியினருக்குமான துல்லியமான கணிப்பு!

may

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்கள் ராசிக்கு ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கக் கூடிய வகையில் பலன்கள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் நன்கு ஆலோசனை செய்து விட்டு எடுப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை மேலும் வலுவாகும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண இருக்கிறீர்கள். பெண்களுக்கு கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். ராசிநாதன் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கடின முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை கிடைக்காத உங்களுடைய திறமைகளுக்கு உரிய அங்கீகாரங்களை எதிர்பாராத நேரத்தில் கிடைக்க பெறுவீர்கள். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். அஷ்டம சனி பாதிப்புகள் குறையும் என்பதால் இதுவரை அனுபவித்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பண ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைத்த இடத்தில் இடமாற்றமும், நினைத்த நேரத்தில் சலுகையும் கிடைக்கும். பெண்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். சண்டிகேஸ்வரரை வழிபடுங்கள் நன்மைகள் பிறக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை சுலபமாக எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளை தவிர்த்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது உத்தமம். சுப காரிய முயற்சிகளில் தடைகள் இல்லாமல் வெற்றி அடையும். பெண்களுக்கு பொறுமை தேவைப்படக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில், சாப்பிடும் உணவுப் பொருட்களில் அக்கறை தேவை.

சிம்மம்
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கும். எந்த அளவிற்கு வரவு இருக்கிறதோ அதே அளவிற்கு வரவும் செலவும் வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. பல சவாலான விஷயங்களை சாதிப்பீர்கள். கூடுதல் உழைப்பை கொடுத்தால் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் மந்தமாக செயல்படுவார்கள். பெண்கள் பொறுப்புணர்வு அறிந்து செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். அங்காரகனை வழிபட்டு வர அமைதி காணலாம்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் எண்ணங்களுக்கு எதிரான சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமண சுபகாரிய முயற்சிகளில் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை தலையில் சுமந்து கொள்ளாமல் அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் வேலையை கூடுதல் கவனம் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திறமைக்கு சவால்கள் ஏற்படும். போட்டியாளர்களை சமாளிக்க புதிய உத்திகளை கையாள்வது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டில் அக்கறை கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை ஏற்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் உற்சாகம் தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் ஆதரவு பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியான விஷயங்களில் ஏற்றம் தரும் வகையில் இருப்பதால் பண பிரச்சனைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கலாம். சுக்ர வழிபாடு செய்வது நலம் தரும்.

விருச்சிகம்
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சூழ்நிலை மாறி இம்மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதட்டமான சூழ்நிலைகளை தவிர்த்து வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வருவது வரட்டும் என்று இருந்தாலே பாதி பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெண்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி காணலாம்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணத்திற்கு குறைவில்லா விட்டாலும் பொருளாதார ரீதியான மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்பதால் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் படிப்படியாக நீங்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறலாம். உங்களுடைய பொறுமைக்கு நல்ல பரிசு காத்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். விநாயகர் மந்திரங்களை படித்தால் நல்லது நடக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிகம் பொறுமை தேவைப்படும் மாதமாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறும். உங்களுடைய நட்பு வட்டம் மேலும் மேலும் விரிவடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பூச்சிகளை எடுப்பதை தவிர்ப்பது உத்தமம் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில்லை இடையூறுகள் இருக்காது. குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் இருக்காது. கூடுமானவரை குடும்ப விஷயங்களை கூடுமானவரை மூன்றாம் நபர்களிடம்பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய விஷயங்களை கையாள்வது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்ல பலன் கொடுக்கும். குடும்ப விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எப்பொழுதும் வேலையில் கவனம் செலுத்தாமல் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குவது மன அமைதிக்கு வழிவகுக்கும். எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நண்பர்கள் பக்கபலமாக இருந்து உதவி செய்வார்கள்.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணும் யோகமுண்டு. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். வாய்ப்பு ஒரு முறைதான் உங்களுடைய கதவை தட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய விஷயங்களில் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு நிதானம் ஒன்றே தீர்வாக அமையும். கூடுமானவரை முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பைரவரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.