ஆஸ்திரேலிய மண்ணில் மாயங்க் அகர்வால் படைத்த புதிய சாதனை.!

agarwal

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (26-12-2018) துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் டாஸ் வென்ற இந்திய அணி நிதானமாக சிறப்பான துவக்கத்தினை அளித்தது.

agarwal 2

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக விஹாரி மற்றும் அகர்வால் ஆட்டத்தினை துவக்கினர். இந்திய அணிக்காக இன்று மாயங்க் அகர்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 215ரன்களை குவித்துள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அகர்வால் 76 ரன்களை அடித்தார்.