ஓட்ட பந்தய வீரராக மாற்ற நினைத்தேன். ஆனால் அவர் வேகப்பந்து வீச்சாளராக நினைத்தார். கடைசியில் நடந்தது வேற – இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரரின் தந்தை

Markande-Father

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

indian-team

ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 அணியில் இடம்பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரரான மாயங்க் மார்கண்டேவின் தந்தை நேற்று அவரது மகனை பற்றி ஒரு பேட்டி அளித்தார். அதில் அவசர பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது : நான் ஒரு அத்லெட் எனவே என் மகன் மார்கண்டேவை ஊட்ட பந்தய வீரராக மாற்ற நினைத்தேன். அனால், மார்கண்டே 5 வயது முதல் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அவருக்கு வேகப்பந்து மற்றும் பேட்ஸ்மேனாக ஆசை. அதனால் அவரை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்தேன். அவரது பயிற்சியாளர் அதை மறுத்தார்.

markande

மார்கண்டேவின் திறமை ஸ்பின் பவுலிங்கில் பிரகாசமாக உள்ளது. எனவே, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றினால் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையுமென்று கூறினார். அதன்படி தொடர்ந்து பயிற்சி எடுத்த மார்கண்டே தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

டி20 போட்டிகளில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திகை இதனால் தான் ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை – உண்மையை சொன்ன சஞ்சய் மஞ்சுரேக்கர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்