இன்று இந்த வார்த்தைகளை கேட்டால் மட்டும்தான் மனிதனுடைய முகத்தில் சிரிப்பு வருகிறது. இந்த வார்த்தைகளைக் கேட்டால், மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் சந்தோஷத்தில் மூழ்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆமாங்க, அந்த வார்த்தை என்னன்னு தெரிஞ்சுதா. காசு பணம் துட்டு மணி மணி. இதுதான், இன்றைய மனிதர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. எந்த ஒரு வீட்டில் பணம் காசு இல்லையோ, அந்த வீட்டில் இன்று சந்தோஷம் இல்லை.
அந்த காலத்தில் சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கைக்கும் கடன் வாங்குவதற்கும் வெறும் பணத்திற்கு மட்டுமே தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பணம் இல்லையே பிணம் என்ற நிலைமைக்கு நாம் வந்து விட்டோம். உங்களுக்கும் வீட்டில் பணப் பிரச்சனை, வாஸ்து பிரச்சனை, சண்டை சச்சரவுகள் என்று பலவகை பட்ட தொந்தரவுகள் இருக்கிறதா. எல்லாவற்றிற்கும் ஒரு எளிமையான தீர்வு இருக்கிறது. அதைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
வீடு சுத்தமாக இருந்தால் எந்த வாஸ்து தோஷமும் எந்த கெட்ட நேரமும் நம்மை எதுவும் செய்யாது. வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் எந்த வீட்டில் விளக்கு ஏற்றி வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றி வைத்து குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் வாஸ்து தோஷத்தால் பிரச்சனை இருக்காது. இது நம்முடைய மன திருப்திக்காக சொல்லிவிடுகின்றோம். ஆனால் ஒரு வீட்டில் வாஸ்து தோஷம் என்று இருந்தால் நம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகள் நம்மை ஏதாவது ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுக்கொண்டே தான் இருக்கும்.
உடனடியாக வீட்டை இடித்து மாற்ற முடியுமா. நிச்சயம் முடியாது. சொந்த வீடு வைத்திருப்பவனாலேயே வீட்டை உடனடியாக இடித்து வாஸ்து தோஷத்தை சரி செய்ய முடியாது. நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் நான் என்ன செய்வது. 11 மயிலிறகு வாங்கிக் கொள்ளுங்கள். கடையில் பணம் கொடுத்து வாங்கினாலும் சரி, அல்லது காடுகளில் மயிலிறகு கீழே உதிர்ந்து இருக்கும். அதை எடுத்து வந்தாலும் சரி, மயிலை கஷ்டப்படுத்தி மயில் இறகை, மயிலிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வரக்கூடாது. அது மிகப்பெரிய பாவம்.
இந்த மயிலிறகை வாங்கி வந்து 11 மயில் இறகையும் ஒன்றாக ஒரு டேப் போட்டு ஒட்டிக் கொள்ளுங்கள். அல்லது நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். அல்லது ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம். மயில் இறகை ஒரு சுவற்றில் தலைகீழாக வைக்க வேண்டும். அதாவது மயிலிறகின் குச்சி பக்கம் மேலே பார்த்த படியும், அந்த மயில் கண் பகுதி, கீழே தரையை பார்த்த படியும் சுவரிலேயே ஒட்டி விடுங்கள்.
வீட்டில்எந்த இடத்தில் வீட்டில் இந்த மயிலிறகை இப்படி வைக்க வேண்டும் தெரியுமா. நீங்க வீட்டிற்குள் நுழைகிறீர்கள். நிலைவாசல் கதவை திறந்த உடனேயே உங்களுக்கு நேர் எதிராக எந்த இடம் தெரிகிறது. அந்த இடத்தில், சுவரில் இந்த மயிலிறகை வைத்துவிட்டால் வீட்டிற்குள் எந்த கெட்ட தோஷமும் வராது. வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் சரியாகும்.
பிறகு எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்து உங்களுடைய வீட்டில் பணம் காசு சரமாரியாக புழுங்க துவங்கிவிடும். சந்தோஷமாக நீங்களும் காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலை பாடலாம். ஆமாங்க சந்தோஷம் என்ற வார்த்தை நம்முடைய முகத்தில் எப்போது வருகிறது. பணம் காசு நம் கைக்கு வரும்போது தான். என்ன செய்வது இன்றைய கலியுகம் அந்த அளவுக்கு மனிதனை ஆட்டி வைக்கிறது. வேறு வழி கிடையாது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்
இதுபோல ஏதாவது பரிகாரத்தை செய்து பாருங்கள். மந்திரத்தில் மாங்காய் கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதற்காக பரிகாரத்தை செய்து விட்டு அமைதியாக இருக்கக் கூடாது. முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நிச்சயமாக உங்களுக்கான கஷ்டம் தீரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.