இந்த ஒரு பொருள் உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டில் இருப்பவர்களையும் எந்த ஒரு தோஷமும் தாக்குவதற்கு வாய்ப்பே கிடையாது.

murugan

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் வந்துவிட்டால் போதும். நம்முடைய மனம் அலைபாய தொடங்கிவிடும். நம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களினால் இந்த கஷ்டம் வந்திருக்குமோ? நாம் செய்கின்ற பூஜை புனஸ்காரங்களில் பிழை ஏற்பட்டிருக்குமோ? நாம் செய்த பரிகாரத்தில் பிழை இருக்குமோ? என்ற பயம் தான் நமக்கு இருக்கும் முதல் எதிரியே. பயத்தை துணிவோடு எதிர்கொண்டு, வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டால், ‘அந்த துயரமே துவண்டுபோய் தூரம் போய் விடுமாம்’. அப்புறம் என்ன? நம் வீட்டில் கஷ்டமும் இல்லை. தோஷமும் இல்லை.

murugar1

நமக்கு இருக்கக்கூடிய பல சந்தேகங்களில் இந்த மயில் இறகை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகமும் எல்லோருக்கும் இருந்து வருகிறது. மயிலிறகை வைத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அந்த முருகன், மயிலை எதனால் தன்னுடைய வாகனமாக ஏற்றுக் கொண்டார் என்ற கேள்விக்கான பதிலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முருகப்பெருமான் அவதரித்தது ஆண் பெண் இன சேர்க்கையின் மூலம் அல்ல. அவர் எம்பெருமானின் நெற்றியிலிருந்து வந்த நெருப்பில் அவதாரம் எடுத்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். இதேபோல் தான் மயிலினமும். ஆண் பெண் இன சேர்க்கை இல்லாமல் தன்னுடைய இனத்தை விருத்தி செய்யும் ஒரு உயிரினம்.

mayilaragu1

அதாவது, ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடும் போது, தன்னுடைய உயிர்ச்சத்தை வெளியேற்றிவிடும். அந்த உயிர் சத்தை பெண்மையில் கொத்தி சாப்பிட்டு விடும். இதன் மூலம் தான் மயில் தன்னுடைய இனப்பெருக்கத்தை செய்கின்றது. முருகப்பெருமானும் ஆண் பெண் சேர்க்கையினால் அவதாரம் எடுத்தவர் அல்ல. இதேபோல் தான் மயிலும், இனச்சேர்க்கை மூலம் தன்னுடைய இனத்தை பெருக்கிக் கொள்வதில்லை. ஆகவேதான் முருகப்பெருமான் இந்த மயிலை தன்னுடைய வாகனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று சொல்கிறது வரலாறு.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு எந்த தோஷத்தினாலும் நிச்சயமாக பெரிய விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. அந்த முருகப் பெருமானினே தன்னுடைய வாகனமாக மயிலை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த மயில் இறகு எந்த வீட்டில் இருந்தாலும், அந்த வீட்டிற்கு நிச்சயம் எந்த தோஷத்தின் மூலமாகவும், தாக்கம் ஏற்படாது என்பதும் நம்பக் கூடிய ஒன்று.

lord-muruga1

உங்களுடைய வீட்டில் வரும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு, உங்கள் வீட்டில் இருக்கும் மயிலிறகு தான் காரணம் என்று போட்டு மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். தானாக மயில் உடம்பில் இருந்து கீழே உதிர்ந்த மயில் இறகினை நாம் எடுத்து வரலாம். எக்காரணத்தைக் கொண்டும் மயிலின் தேகத்தில் இருந்து அதை பிடித்து பிடுங்க கூடாது என்பதற்காகத்தான் மயிலிறகை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

murugan-and-krishnar

வீட்டு பூஜை அறையில் கூட மயிலிறகை வைத்து வழிபாடு செய்யலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தேவையற்ற எதையாவது சொல்லி, உங்கள் மனதைக் குழப்பி விட்டு, அதன்பின்பு கெடுதல் நடந்து விடுமோ என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தால், நிச்சயம் கெடுதல் நடக்கத்தான் செய்யும்.

thiruchendur-murugan

நல்லதே நடக்கும் என்று நினைத்து ஒரு வேலையை தொடங்குங்கள். வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும். முடிந்த வரை நீங்கள் ஒரு விஷயத்தை செய்கிறீர்கள் என்றால், அதை முழு நம்பிக்கையோடு செய்யுங்கள். அரைகுறை மனதோடு செய்யும் வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, அது நமக்கு முழுமையான பலனை தேடி தரவே தராது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் யார் தெரியுமா? இவருடைய மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.