12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் யார் தெரியுமா? இவருடைய மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

ganapathi-astro
- Advertisement -

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்கள் இருக்கும். அந்த குணாதிசயங்களுக்கு ஏற்ப அவருக்கு உரிய கடவுள்களும், அவர்களை வணங்கும் முறைகளும் ஆன்மீகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ராசிக்காரர்கள் அவைகளை சரியாக செய்து வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் பிரகாசமான மாற்றங்கள் ஏற்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அவ்வகையில் 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர் யார்? அவர்கள் உச்சரிக்க வேண்டிய விநாயகர் மந்திரம் என்ன? இதனால் உண்டாகும் பலன்களும் நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
பொதுவாகவே மேஷ ராசிக்காரர்கள் வீரம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையும், கம்பீரமும் மற்றவர்களை விட அதிகமாகவே ஈர்க்கும் படி இருக்கும். எனவே இவர்கள் வீர கணபதியை வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்கு விநாயகர் மந்திரம்:
கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்..

- Advertisement -

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருப்பார்கள். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்கிற பழமொழியை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். வெற்றியை குவிக்க நினைக்கும் ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் வித்யா கணபதியை வணங்குவது யோகத்தை சேர்க்கும்.

ரிஷப ராசிக்கு விநாயகர் மந்திரம்:
நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்..

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவானை அதிபதியாக கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தொழில் வளம் சிறக்கவும், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கவும் லக்ஷ்மி கணபதியை வழிபட்டால் மிகவும் நல்லது.

மிதுன ராசிக்கு விநாயகர் மந்திரம்:
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே..

- Advertisement -

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் மனதை எப்பொழுதும் அலைபாய விட்டுக் கொண்டே இருப்பார்கள். சந்திர பகவான் ஆதிக்கம் கொண்ட உங்களுடைய ராசிக்கு தெளிவான சிந்தனையும், புத்திக்கூர்மையும் ஏற்படுவதற்கும் ரோம்ப கணபதியை வழிபடுவது மிகவும் நல்லது.

கடக ராசிக்கு விநாயகர் மந்திரம்:
பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல..

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாகவே ஆளுமை திறன் கொண்டவர்கள். சிறந்த ஆளுமை பண்பை சரியான முறையில் வளர்த்துக் கொள்வதற்கும், தொடர் வெற்றிகள் குவிக்கவும் நீங்கள் வணங்க வேண்டிய கணபதி விஜய கணபதி ஆகும். அவருக்குரிய மந்திரத்தை ஜபித்தால் நன்மைகள் உண்டாகும்.

சிம்ம ராசிக்கு விநாயகர் மந்திரம்:
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் அதிர்ந்து கூட யாரையும் பேசுவதில்லை. மிகவும் சாந்தமான சுபாவம் கொண்ட உங்கள் ராசிக்கு நீங்கள் மோகன கணபதியை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை உச்சரிப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும்.

கன்னி ராசிக்கு விநாயகர் மந்திரம்:
தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்..

துலாம்
Thulam Rasi
யாரையும் பார்த்தவுடனே கணித்து விடும் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். வெற்றியை தேடி நீங்கள் செல்லவே வேண்டாம். வெற்றி உங்களைத் தேடி வரும். உங்கள் திறமைக்கு உரிய வெற்றிகள் கிடைக்க, வெற்றி கணபதியை வணங்குங்கள். அவருடைய மந்திரத்தை உச்சரித்து பயன்பெறுங்கள்.

துலா ராசிக்கு விநாயகர் மந்திரம்:
பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக இருக்கின்றார். செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள் சக்தி கணபதியை வழிபட வெற்றிகள் குவியும். மேலும் நினைத்ததெல்லாம் நடக்க அவருடைய மந்திரத்தை உச்சரித்து வாழ்வில் அதிர்ஷ்ட யோகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விருச்சிக ராசிக்கு விநாயகர் மந்திரம்:
சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆதிக்கம் கொண்டவராக இருக்கிறார். நீங்கள் சங்கடங்கள் தீர, சங்கடஹர கணபதி மந்திரத்தை உச்சரித்து அவரை வழிபடுவது யோகத்தை தரும். வீட்டில் மனநிம்மதி ஏற்படவும், வருமானம் அதிகரிக்கவும் சங்கடஹர கணபதியை வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்.

தனுசு ராசிக்கு விநாயகர் மந்திரம்:
சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்..

மகரம்
Magaram rasi
சனிபகவான் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை இறை வழிபாடுகள் மூலமே எளிமையாக நீக்கி விட முடியும். சகல யோகங்களையும் பெற யோக கணபதியை வழிபட்டு, அவருடைய மந்திரத்தை உச்சரித்தால் நன்மைகள் பிறக்கும்.

மகர ராசிக்கு விநாயகர் மந்திரம்:
ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்..

கும்பம்
Kumbam Rasi
பொதுவாகவே கும்ப ராசிக்காரர்கள் அனைவரின் மனதையும் எளிதாக கவர்ந்து விடுவது உண்டு. உங்களுடைய நயமான பேச்சிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. எளிதில் எவருடனும் நட்பு கொண்டு விடும் உங்களுடைய ராசிக்கு, நீங்கள் வணங்க வேண்டிய கணபதி, சித்தி விநாயகர் ஆவார். அவருடைய மந்திரத்தை உச்சரித்து நன்மைகளைப் பெறலாம்.

கும்ப ராசிக்கு விநாயகர் மந்திரம்:
லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே..

மீனம்
meenam
பிறரின் துன்பத்தை கூட, தன்னுடைய துன்பமாக நினைக்கும் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் கிடைக்கவும், வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கவும் பால கணபதியை வழிபடலாம். நினைத்ததெல்லாம் நடத்தி காட்டுவதற்கு இவருடைய மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம்.

மீன ராசிக்கு விநாயகர் மந்திரம்:
பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக!

உங்கள் ராசிக்குரிய கடவுளையும், அவருடைய மந்திரத்தையும் எந்த நேரத்திலும், எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் உச்சரிக்கலாம். அவரை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்தாலே போதும். வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம். கணபதியை வணங்கினாலே யோகம் தான். அதிலும் நம்முடைய ராசிக்கு உரிய கணபதியை வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
தீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம்! உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா? அதற்கான விமோசனம் கிடைக்க நீங்கள் நிச்சயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -