மயோனைஸ் சாண்ட்விச்சுக்கு மட்டுமில்லங்க தலைமுடியையும் பளபளன்னு அடர்த்தியா வளர வைக்குமாம் உங்களுக்கு தெரியுமா?

mayonnaise-hair-pack
- Advertisement -

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் இந்த மயோனைஸ் சாண்ட்விச், சிக்கன் ப்ரை, நான் ரொட்டி, தந்தூரி, சவர்மா, கிரில் சிக்கன் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக தொட்டுக் கொள்ள கொடுப்பார்கள். வெண்ணை போல சுவையாக இருக்கக் கூடிய இந்த மயோனைஸ் எதைக் கொண்டு தயாரிக்கிறார்கள்? இந்த மயோனைஸ் எப்படி தலைமுடியை பளபளன்னு அடர்த்தியாக வளர செய்யப் போகிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாப்பிடும் உணவுப் பொருளாக இருக்கும் இந்த மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை மற்றும் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எண்ணெயுடன் முட்டையை சேர்த்து நீண்ட நேரம் அரைப்பதால் இந்த மயோனைஸ் கிடைக்கிறது. இதை வெவ்வேறு விதங்களில் தயாரிப்பதும் உண்டு. இதன் சுவையும், நிறமும் இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்றே கூறலாம்.

- Advertisement -

இத்தகைய சிறப்பு மிகுந்த மயோனைஸ் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், நம்முடைய கேச வளர்ச்சிக்கும் பெருமளவு உதவியாக இருக்கிறது என்று கூறுகின்றனர் அழகு கலை நிபுணர்கள் பலரும். மயோனைஸில் சேர்க்கப்படும் எண்ணெய், தலைமுடியின் வளர்ச்சிக்கு உரியதாக சேர்த்து தயாரித்ததாக இருப்பது இங்கு அவசியமாகிறது, எனவே இதை கவனித்து மயோனைஸ் பயன்படுத்துவது தான் இதில் முக்கியமானதும் கூட.

முட்டையில் இருக்கும் அதிகப்படியான புரத சத்துக்கள் தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு துணை புரிகிறது. இதனால் இந்த மயோனைஸ் பயன்படுத்துவதன் மூலம் வேர்க்கால்கள் வலிமை அடைகின்றது. மேலும் கூந்தலின் பளபளப்பு தன்மையும் பெருகுகிறது. எவ்வளவு ஹார்டான கூந்தலையும், பட்டு போல ஷைனிங்காக மாற்றக்கூடிய இந்த மயோனைஸ் ஆலிவ் ஆயில் உடன் சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் சிறந்த பலன் கொடுக்கும். இந்த ஆலிவ் ஆயில் தலைமுடியின் டேமேஜ் அனைத்தையும் சரி செய்யக்கூடியது.

- Advertisement -

வலுவில்லாத தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் இருந்து உதிரக்கூடிய தலைமுடி பிரச்சனைகளை விரைவாக சரி செய்யக்கூடிய ஆற்றல் மயோனைஸ்க்கு உண்டு. பொதுவாக பெரும்பாலனருக்கு உடல் உஷ்ணத்தால் தலைமுடி வேகமாக உதிர்கிறது. அது போல ஹேர் கலரிங் செய்பவர்களுக்கும் திடீரென தலைமுடி உதிர்தல் அதிகரிக்கிறது. கலரிங் செய்வதால் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்களால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது. இதையும் மயோனைஸ் ஹர்பாக் போடுவதன் மூலம் முற்றிலுமாக சரி செய்ய முடியும். மேலும் உடல் உஷ்ணத்தால் உண்டாகக்கூடிய தலைமுடி உதிர்வையும் தடுத்து நிறுத்தி கேசத்தை அடர்த்தியாகவும், நீளமாகவும், பளபளப்புடனும் மாற்றுகிறது.

மூன்று டீஸ்பூன் அளவிற்கு மயோனைஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் தலையில் பேக் போல முழுவதுமாக வேர்க்காலில் இருந்து நுனி வரை அனைத்து இடங்களிலும் தடவி கொள்ளுங்கள். பின்னர் ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நன்கு தலையை ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். இது தலை முடியை வளர செய்வது மட்டுமல்லாமல், கண்டிஷனர் போட்டது போல ஷைனிங்காகவும், அலைபாயும் கூந்தலையும் கொடுக்கும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் வறண்ட கூந்தல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இதை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதும் அபரிமிதமான கூந்தல் வளர்ச்சியையும், பட்டு போல மின்னும் கேசத்தையும் காணலாம்.

- Advertisement -