மீல்மேக்கரை வைத்து கறி குழம்பின் சுவையிலே அருமையான இந்த கிரேவியை ஒரு முறை செஞ்சு பாருங்க. பத்து நிமிஷத்துல இவ்வளவு டேஸ்ட்டான ஒரு கிரேவியை செய்யவே முடியாது.

soya chunks gravy
- Advertisement -

சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸ் இவற்றிற்கெல்லாம் அசைவத்தில் ஏதாவது ஒரு சைடு டிஷ் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். எல்லா நாட்களிலும் அசைவம் சாப்பிட முடியாது அல்லவா. அது போன்ற சமயங்களில் இந்த மீல்மேக்கரை வைத்து சுவையான இந்த கிரேவியை செய்து சாப்பிட்டு பாருங்க அசைவம் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சுவையான மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை 

இந்த கிரேவி செய்ய முதலில் மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், 1 துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, 2 கிராம்பு, 1 பட்டை, 1 துண்டு கல்பாசி இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மைய்ய பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கிரேவியை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடான உடன் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் சோம்பு, லவங்கம், பட்டை, பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து பொறிந்த பிறகு 1வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு 2 தக்காளியும் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதங்கிய பிறகு, நாம் அரைத்து வைத்த தேங்காய் விழுதை இதில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். ஏனென்றால் பூண்டு, இஞ்சி எல்லாம் பச்சையாக சேர்த்து அரைத்து இருப்பதால் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

இவையெல்லாம் வதங்கிய பிறகு இந்த கிரேவியில் 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்த பிறகு இதன் பச்சை வாடையும் போகும் வரையும் வதக்கி விட வேண்டும்.

இவையெல்லாம் சேர்த்து வதக்கிய பிறகு இந்த கிரேவிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்திருக்கும் மீள் மேக்கரையும் இதில் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். இவையெல்லாம் கொதித்து கிரேவியிலிருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக அரிந்து அதையும் இதில் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் வித்தியாசமான தயிர் சட்னி இப்படி செஞ்சு பாருங்க, இனி சட்னி அரைக்க வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே தேட மாட்டீங்க!

இந்த கிரேவி செய்வதற்கு அதிக நேரம் கூட எடுக்காது. மீல்மேக்கர் தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் அந்த பத்து நிமிடத்தில் நீங்கள் இந்த கிரேவிக்கான மசாலா அனைத்தையும் தயார் செய்து விடலாம். சுவையான இந்த மீல்மேக்கர் கிரேவியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -