ரவை இட்லி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இதை எப்படி செஞ்சா பர்ஃபெக்டா வரும்னு தெரிஞ்சிகிட்டா இந்த ரவை இட்லி செய்றதுல இனி உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல.

- Advertisement -

காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள் சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரவை இட்லி செய்து சாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். அது மட்டும் இன்றி இதற்கு அரிசி, பருப்பு ஊற வைத்து அரைப்பது போன்ற வேலைகள் எதுவும் கிடையாது. இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த ரவை இட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த ரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

ரவை இட்லி செய்முறை விளக்கம்.
இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை எடுத்துக் கொள்ளுங்கள். பேன் சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு இரண்டையும் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்து வதக்கிய பிறகு பத்து முந்திரிப்பருப்பையும் சேர்த்து சிவக்க வறுத்த பிறகு, கால் கப் துருவிய கேரட், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அதையும் லேசாக வதக்கி கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் ரவை சேர்த்து வாசம் வரும் வரை லோ ஃபிலிமில் வைத்துக் கொள்ளுங்கள் ரவை சிவந்து விடக்கூடாது. அதே நேரம் ரவையை வறுக்காமல் செய்தாலும் மாவு பிசுபிசுப்பாக இருக்கும். இட்லியும் சப்பையாக வரும். எனவே ரவை வறுக்கும் பதம் மிகவும் முக்கியம் பார்த்து சிவக்காமல் வாசம் வரும் வரை மட்டும் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரவை வாசம் வரும் வரை வறுத்தப் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். ரவை ஆற வைக்க வேண்டும் .அப்படியே அந்த பேனில் ஆற வைக்கக் கூடாது அதை வேறு ஒரு தட்டில் மாற்றி அதன் பிறகு அதை ஆற வைத்த பிறகு ரவை ஒரு பவுலில் சேர்த்துக் அதில் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் அதிகம் புளிக்காத தயிரையும் சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிய பிறகு அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் சமையல் சோடா, கால் டீஸ்பூன் பெருங்காயம் ஒரு கைப்பிடி அளவுக்கு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். பத்து நிமிடம் ரவையும் தயிரும் நன்றாக ஊற வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து ரவை தயிரில் ஊறி நன்றாக திக்கான பதத்தில் வந்திருக்கும் உடனே தண்ணீர் ஊற்றாமல் , கரண்டி வைத்து மாவை நன்றாக அடித்து கொடுங்கள். மாவு அடிக்க அடிக்க நீர்த்து வரும் அதன் பிறகு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இட்லி தட்டி வைத்து அதில் முதலில் ஒவ்வொரு முந்திரி வைத்து அதன் பிறகு எந்த இட்லி மாவை அதில் ஊற்றுங்கள். முந்திரி வைப்பது வெறும் அளவிற்காகத் தான்.

நீங்கள் முந்திரிக்கு பதில் கேரட் அல்லது வேறு உங்களுக்கு விருப்பமானவற்றை கூட வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றாலும் பரவாயில்லை.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் மசாலா கிரேவியை ஒரு முறை இப்படி செஞ்சி குடுத்தீங்கன்னா, கத்திரிக்காயே பிடிக்காது என்பவர்களுக்கு கூட, இது பெவரிட் டா இருக்கும். பிரியாணி முதல் தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் ஏற்ற பக்கா சைடு டிஷ்.

இது வைத்த பிறகு சரியாக ஆறு அல்லது ஏழு நிமிடம் வரை வந்தால் போதும் அதிகமாக வெந்து விடக்கூடாது. அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இட்லி எடுத்து விடுங்கள்.

- Advertisement -