சூப்பர் ‘சோயா கோலா உருண்டை’ செய்வது இவ்ளோ ஈஸியா? 10 நிமிஷத்துல இந்த ஸ்னாக் ரெடி பண்ணிடலாம்.

meal-maker4
- Advertisement -

அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில் இருக்கும் மீல்மேக்கரை வைத்து, சைவ பிரியர்கள் மீல் மேக்கர் கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு இதை ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வித்தியாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். சுவையான, சுலபமான சோயா கோலா உருண்டை, எப்படி செய்வது பார்த்து விடலாமா?

meal-maker

Step 1:
முதலில் 1 கப் அளவு மீல்மேக்கரை எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பூன் உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்க விட்டு, சோயா நன்றாக உப்பி வந்ததும், தண்ணீரை வடிகட்டி, அந்த சோயாவில், மீண்டும் ஒரு கப் குடிக்கின்ற பச்சை தண்ணீரை ஊற்றி அலசி, தண்ணீர் இல்லாமல், சோயாவை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது முறை தண்ணீர் ஊற்றி அலசும் போது, அந்த சோயாவில் இருந்து ஒரு வாடை வீசும் அல்லவா, அது சுத்தமாக போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக 1/2 கப் பொட்டுக்கடலை எடுத்து, மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த கப்பில் சோயாவை அளந்து, எடுத்துக் கொண்டீர்களா, அதே கப்பில் பாதி அளவு பொட்டுகடலை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.

meal-maker1

Step 3:
ஊற வைத்து பிழிந்து தயாராக வைத்திருக்கும் சோயாவை, மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு 1 துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 பச்சை மிளகாய், 1 வரமிளகாய், 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து, அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சோயா முழுசாக இருக்கக்கூடாது, மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 4:
அரைத்து வைத்திருக்கும் இந்த சோயாவை, ஒரு அகலமான பாத்திரத்தில் மாத்தி, எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்திருக்கும் சோயா கலவையோடு, அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை 1/2 கப், அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1 – பொடியாக நறுக்கியது, சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பொடியாக வெட்டி போட்டுக் கொள்ளவும். இஞ்சி பூண்டை துருவியும் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தாலும், ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசைய வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. சோயாவை கொதிக்க வைக்கும் போது, உப்பு சேர்த்து இருக்கின்றோம். அதனால் உப்பைச் சேர்க்கும்போது கவனம் தேவை.

meal-maker2

Step 5:
இறுதியாக நன்றாக அழுத்தம் கொடுத்துப், பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக செய்து,  எண்ணையை நன்றாக சூடு படுத்தி, மிதமான தீயில் வைத்து விட்டு, அதன் பின்பு கோலா உருண்டைகளை சேர்த்து, பொரித்து எடுக்க வேண்டியதுதான். உங்களுக்கு தட்டையாக வேண்டுமென்றாலும், அந்த உருண்டையை உள்ளங்கைகளில் வைத்து ஒரு அழுத்து அழித்து விட்டு, பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

meal-maker3

பொரித்தெடுத்த கோலா உருண்டை யோடு, கொஞ்சம் டொமேட்டோ சாஸ் வைத்து பரிமாறலாம். வாசனையோடு சுவையாக இருக்கக்கூடிய இந்த கோலா உருண்டை குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
முடி உதிர்வை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக, விரைவாக, முடியை வளரச் செய்ய, இதை விட சுலபமான எண்ணையை யாராலும் தயார் செய்ய முடியாது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -