முடி உதிர்வை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக, விரைவாக, முடியை வளரச் செய்ய, இதை விட சுலபமான எண்ணையை யாராலும் தயார் செய்ய முடியாது.

hair
- Advertisement -

ஒருவருடைய தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும், அழகாகவும், இருக்கும்பட்சத்தில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுடைய அழகு கொஞ்சம் அதிகமாகத்தான் தெரியும். ஒருவருடைய அழகுக்கு முக்கிய பங்கு வகிப்பது தலையில் இருக்கும் முடியும் தான். அந்த முடியை கருமையாக, அடர்த்தியாக எப்படி வளரச் செய்வது. இந்த கால சூழ்நிலையில் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்சினை இருக்கின்றது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நம் வீட்டிலேயே சுலபமான முறையில், மிக மிக சுலபமான முறையில் எண்ணையை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதற்கு 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெய் தேவைப்படும். பச்சையாக இருக்கும், கருவேப்பிலையை, தண்ணீரில் போட்டு கழுவி நிழலில் காய வைத்து விட வேண்டும். கருவேப்பிலை காய்ந்து விடக்கூடாது. கருவறையில் இருக்கும் தண்ணீர் நன்றாக உளர வேண்டும். கருவேப்பிலை பச்சை நிறத்திலேயே தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

பச்சை நிறத்திலேயே இருக்கும் அந்த கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது. அப்படியே பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பொடியாக்கிய கருவேப்பிலையானது, 1/2 கப், அதாவது 250ml கப்பில் அளந்து கொள்ளுங்கள். தயாராக எடுத்து வைத்திருக்கும் எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி, அந்த எண்ணெயோடு, அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை பொடியையும் சேர்த்து, இதோடு ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை பொடிசெய்து சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

curry-leaves

கருவேப்பிலை, அந்த எண்ணெயில், நன்றாக வெந்து, கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும், தேங்காய் எண்ணெயில் இறங்கவேண்டும். கருவேப்பிலையின் சிடசிடப்பு அடங்கும்வரை, எண்ணையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க வைத்தால் போதும்.

- Advertisement -

இறுதியாக அந்த எண்ணை, பச்சை நிறத்திற்கு வந்திருக்கும். எண்ணெயில் வந்த கொதி முழுமையாக அடங்கியிருக்கும். எண்ணெயை காய வைக்க பயன்படுத்தும், அந்த கடாய் இரும்பு கடாயாக இருப்பது, சிறப்பானது. அப்படி இல்லை என்றால் எவர்சில்வர் கடாயை வைத்து கொள்ளுங்கள். அலுமினிய கடாய், நான்ஸ்டிக் கடாயை உபயோகப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.

coconut-oil

எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு, வெள்ளை காட்டன் துணியில் கருவேப்பிலையை வடிகட்டி, பிழிந்து எடுத்து விட வேண்டும். வடிகட்டிய  எண்ணையை, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

long-hair

தலைக்கு குளிப்பதற்கு முன்பாக, இந்த எண்ணையை சிறிதளவு எடுத்து, மயிர்க்கால்களில் இருக்கும் வேர்களில் படும்படி, நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன் பின்பு தலைக்கு குளித்து விட வேண்டியதுதான். ஆரம்பத்தில் இந்த எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த தொடங்குங்கள். குளிர்ச்சியால், காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த எண்ணெய், உடல் சூட்டை தனித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். மிகக் குறைந்த நாட்களிலேயே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் செய்யும் இந்த செயல்கள் குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

இது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -