வித்தியாசமான முறையில் மசாலா பொருட்கள் நிறைந்த ‘மீல் மேக்கர் கிரேவி’! இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சூடான சாதம் எல்லாவற்றிற்கும் சைடிஷ்.

mealmaker

மீல்மேக்கரை வைத்து வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் ஒரு கிரேவியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ பிரியர்களுக்கு இந்த கிரேவி மிகமிகப் பிடிக்கும். மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து, செய்யக்கூடிய இந்த கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி, சுடச்சுட சாதம் எல்லாவற்றிற்கும் சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம். சூப்பர் மீல் மேக்கர் கிரேவி எப்படி செய்வது பார்த்து விடலாமா?

meal-maker

மீல் மேக்கர் கிரேவி செய்முறை:
Step 1:
முதலில் ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி வரமிளகாய் – 5, வரமல்லி  – 1/2 ஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இவை அனைத்தையும் நன்றாக வதக்கி, நன்றாக ஆற விட்டு, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:
அடுத்ததாக 100 கிராம் அளவு மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, 1/2 ஸ்பூன் அளவு உப்பு போட்டு, 10 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின்பு அந்தத் தண்ணீரிலிருந்து நன்றாகப் பிழிந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மேல் மேக்கரை நான்காகவும் வெட்டிக் கொள்ளலாம்.

annachi-poo-pattai

Step 3:
இப்போது ஊற வைத்திருக்கும் மீல்மேக்கரோடு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசைந்து மீல்மேக்கரோடு மசாலா கலவையும் 15 நிமிடங்கள் நன்றாக ஊற வேண்டும். மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது உப்பு போட்டு இருக்கின்றோம். உப்பின் அளவை பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 4:
அடுத்ததாக ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது நன்றாக சூடானதும் சோம்பு, பட்டை, லவங்கம், கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை, இந்த பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். அதன் பின்பாக 10 சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, பொடியாக நறுக்கிய 2 தக்காளி பழங்களையும் சேர்த்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம், தக்காளி குழைந்து கண்ணுக்குத் தெரியாமல் வதங்கவேண்டும்.

frying

Step 5:
கடாயில் வெங்காயம் தக்காளி தொக்கு பச்சை வாடை போகும் அளவிற்கு வதங்கிய பின்பு, மசாலாப் பொருட்களோடு சேர்த்து ஊறிக்கொண்டிருக்கும் மீல்மேக்கரை கடாயில் சேர்த்து விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு தேவைப்பட்டால் போட்டுக்கொள்ள வேண்டும். 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து, நன்றாக கலக்கி விட்டு மிதமான தீயில் மூடி போட்டு 5லிருந்து 8 நிமிடங்கள் அடுப்பில் இருக்கவேண்டும்.

mealmaker1

இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும். இல்லை என்றால் கிரேவி அடி பிடித்து விடும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, இந்த தொக்கை சாதத்தில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இவைகளுக்கு சைட் டிஷ் ஆகவும் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய, வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
என்ன பண்ணாலும் இட்லி சாஃப்டா வரலையா? இந்த 5 டிப்ஸ் மட்டும் கண்ண மூடிட்டு ஃபாலோ பண்ணுங்க போதும்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.