என்ன பண்ணாலும் இட்லி சாஃப்டா வரலையா? இந்த 5 டிப்ஸ் மட்டும் கண்ண மூடிட்டு ஃபாலோ பண்ணுங்க போதும்!

soft-idly-making
- Advertisement -

ஒவ்வொருத்தர் வீட்டில் இட்லி சும்மா பஞ்சு போல வருவதை பார்க்கும் பொழுது நமக்கு ஆத்திரமாக வரும். ஏன்னா நமக்கு அந்த மாதிரி வரலையே என்கிற கடுப்பு தான். இட்லி மாவு அரைப்பது என்பது கூட ஒரு கலை தான். அது எல்லாருக்கும் வந்து விடுவதில்லை. அந்தக் கலையை நாமலும் கற்றுக் கொள்வோமே! இந்த உலகத்தில் முடியாதது என்று ஒன்றுமில்லை. முயற்சி செய்ய வேண்டும். அதற்குரிய சூட்சமத்தை கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவு தான். இட்லியை பஞ்சு போல உங்க வீட்டில் செய்ய இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

idly_3-compressed

டிப் நம்பர் 1:
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் இந்த மூன்று பொருட்களை வைத்து சாதாரணமாக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் கூட சுலபமாக செய்யும் வகையில் எப்படி செய்வது? என்பதை பார்ப்போம். 250 கிராம் கொண்ட ஆழாக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஒரு ஆழாக்கு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு பங்கு உளுந்துக்கு, மூன்றரை பங்கு இட்லி அரிசி எடுத்து இரண்டையும் இரண்டு முறை நன்றாக கழுவி சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து ரொம்ப பெரிசா இல்லாம சிறியதாக வாங்கினால் உபரி அதிகம் வரும்.

- Advertisement -

டிப் நம்பர் 2:
ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி தான் மாவு அரைத்து முடிக்க வேண்டும். உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் வரை செலவிடுங்கள். உளுந்து எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும். தண்ணீர் தொட்டு உளுந்தை நீங்கள் எடுத்து பார்த்தால் வழுக்கிக் கொண்டு கீழே பந்து போல் விழ வேண்டும். அது தான் இட்லிக்கு உளுந்து சரியான பதம்.

idly-maavu1

டிப் நம்பர் 3:
பிறகு அதை தோண்டி எடுத்து விட்டு அரிசியை போட்டு 15 நிமிடம் வரை அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விட்டால் இட்லி அவ்வளவு நன்றாக வராது. அரிசிக்கு முதலிலேயே தண்ணீரை ஓரளவிற்கு தாராளமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு முதலில் தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

டிப் நம்பர் 4:
அரிசி அரைக்கும் பொழுதே கல் உப்பு சேர்த்து அரைத்து விட வேண்டும். இட்லி நன்றாக வர கல் உப்பு தான் சேர்க்க வேண்டும். இதில் சொல்லப்பட்ட எந்த விஷயத்தையும் மாற்றி செய்து விடாதீர்கள். ஒரு முறை அப்படியே செய்து பாருங்கள். நீங்களே அசந்து போகும் அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும்.

idly-maavu

டிப் நம்பர் 5:
பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போதும் நீங்கள் மாவை கிளறக் கூடாது. பிரிட்ஜில் இருந்து எடுத்து அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது. உடனே ஊற்றினால் அவ்வளவாக சாஃப்ட் இருக்காது. உங்களுக்கு தேவையான மாவை மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து உபயோகப்படுத்துங்கள். இந்த 5 டிப்ஸ் கடைப்பிடித்து பாருங்கள், அப்புறம் உங்கள் வீட்டிலும் சாஃப்ட்டான இட்லிகளை சலிக்காமல் நீங்களும் தினம் தினம் சுட்டு சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே
பருப்பு இல்லாமல் இட்லி தோசைக்கு வெறும் தக்காளி வைத்தே எப்படி சாம்பார் செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -