- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மீல் மேக்கரை வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்துப் பாருங்கள். கறி குழம்பு சுவையையும் தோற்கடிக்க...

மீல் மேக்கரை வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்துப் பாருங்கள். கறி குழம்பு சுவையையும் தோற்கடிக்க கூடிய சுவையில் இருக்கும்.

- Advertisement -

வாரத்தில் ஒருமுறையாவது அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் பலரும் இருப்பார்கள். அந்த ஒரு நாளில் ஏதாவது விரதம் என்று வந்துவிட்டால் மிகவும் வெறுப்பாகி விடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் கறிக்குழம்பின் சுவையையும் மிஞ்சும் அளவிற்கு நாம் மீல் மேக்கரை வைத்து ஒரு குழம்பு செய்து கொடுத்தால் அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் கூட இந்த குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட இந்த மீல் மேக்கர் குழம்பை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

மீல் மேக்கர் என்பது சோயாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்து எளிதில் கிடைக்கும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும். அதை ஓரளவுக்கு சரி செய்ய உதவுவதுதான் இந்த மீல் மேக்கர். இதில் புரதம் தவிர, சோயா துகள்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் சிறிது நீரூற்றி அதில் சிறிதளவு கல் உப்பை போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் குதித்த பிறகு அதில் 200 கிராம் மீல் மேக்கரை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, 3 பிரிஞ்சி இலை, 2 பட்டை, சிறிது கல்பாசி, ஒரு ஏலக்காய், 2 கிராம்பு போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை மற்றும் 4 பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு, 2 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிறிது நிறம் மாறியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 3 தக்காளியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி சிறிது வதங்கிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 4 ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு தட்டை வைத்து இதை சிறிது நேரம் மூடி வைத்து எண்ணெய் பிரியும் அளவிற்கு வேக வைக்க வேண்டும். எண்ணெய் பிரிந்த பிறகு அதில் நான்கு கப் அளவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அவை கொதிக்க ஆரம்பித்த உடன் நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் மீல் மேக்கரை தண்ணீர் இல்லாமல் சேர்க்க வேண்டும்.

பிறகு 5 நிமிட மசாலாவின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு மூடி தேங்காயை நன்றாக விழுதாக அரைத்து அதில் சேர்க்க வேண்டும். 2 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை அதில் தூவி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் சுவையான கறி குழம்பு சுவையில் இருக்கக்கூடிய மீல்மேக்கர் குழம்பு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: என்னங்க சமைக்கவே சோம்பேறித்தனமா இருக்கா அப்போ சட்டுன்னு இந்த சோம்பேறி சிக்கன் வறுவல செஞ்சிருங்க. பேரு தாங்க சோம்பேறி சிக்கன் வறுவல் ஆனா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த மீல் மேக்கரை நாம் அளவோடு நம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் ஆரோக்கியம் பெறும். உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஹார்மோன் இம்பேலன்ஸ் தடுக்கிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

சற்று முன்