1 கப் சாதம் போதுமே! சுவையான இந்த ரசகுல்லாவை, 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

rasagulla

மீதமான சாதத்தை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, இப்படி பலவகையான பலகார வகைகளை செய்யலாம். ஆனால், அந்த  சாதத்தை வைத்து, ரசகுல்லாவை செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்! சுவையான, ருசியான ரசகுல்லாவை, மீதமான சாப்பாட்டை வைத்து எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பத்து நிமிஷத்துல இத சட்டுனு செஞ்சிடலாம். குறிப்பா உங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். எப்படி செய்றதுனு பார்க்கலாம் வாங்க!

rasagulla1

ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:
மீதமான சாதம் – 1 கப், சர்க்கரை 1 – கப், கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன், மைதா மாவு – ஒரு ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன்.

சாதத்தில் தண்ணீரை ஊற்றி எல்லாம் எடுக்கக்கூடாது. மதியம் வைத்த சாதத்தில், சாயங்கால நேரத்தில் ரசகுல்லா செய்யலாம்.  முதலில் ஒரு கப் அளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைக்கக்கூடாது. இந்த சாதம் அரைக்கும் போது, கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும். அரைத்த சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

rasagulla2

அரைத்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன் மைதா சேர்த்து, பிசைய வேண்டும். கையில் கொஞ்சம் எண்ணெயை தொட்டு பிசைந்து கொள்ளுங்கள். அந்த மாவின் மேல் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி, தடவி, ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைத்த பின்பு, ரசகுல்லா செய்ய தேவையான அளவு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். மாவைப் போட்டு அழுத்தி பிசைய கூடாது. குலோப்ஜாமூன் மாவு, செய்வது போல, சாஃப்டாக மாவை கையாளவேண்டும். சாதத்தை உருண்டை பிடித்து வைத்த மாவு, அப்படியே ஓரமாக இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது, ஒரு பாத்திரதை அடுப்பில் வைத்து, 1 கப் அளவு சர்க்கரையை போட்டு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கரைக்க வேண்டும். தண்ணீர் சூடாகி சர்க்கரை கரைந்த உடனேயே, உருட்டி வைத்திருக்கும் ரசகுல்லாவை ஒவ்வொன்றாக சர்க்கரை பாகில் சேர்த்து விட வேண்டும். ரசகுல்லா உருண்டைகள் மூன்றிலிருந்து, நான்கு நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.

rasagulla3

இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு, 5 நிமிடங்கள் கழித்து ரசகுல்லாவை சுவைத்துப் பாருங்கள்! அவ்வளவு ஜூசியா இருக்கும். அவ்வளவு சாஃப்டாக இருக்கும். சாதத்தில் செய்த, ரசகுல்லாவா இது! என்று கேட்கும் அளவிற்கு அதன் ருசி இருக்கும் என்பதை, நீங்களே ஒருமுறை ரசகுல்லா செய்து சாப்பிட்டால் தான் உங்களுக்கு தெரியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறு வடை எப்படி செய்வது? 10 நிமிஷத்தில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.