உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறு வடை எப்படி செய்வது? 10 நிமிஷத்தில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!

ururaikizhangu-vadai

தினம் தோறும் மாலை நேரம், டீ குடிப்பதற்கு முன்னால் என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்ற யோசனை எல்லோருக்கும் வரும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சுலபமான முறையில் சுவையான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உருளைக்கிழங்கை வைத்து செய்தாலே, அது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஸ்னாக்ஸை உங்கள் வீட்டில் இன்னைக்கு ஈவினிங் ட்ரை பண்ணி பாருங்க!

vadai

உருளைக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 கால் ஸ்பூன், கடலைமாவு – 2 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை –  பொடியாக நறுக்கியது. தேவையான அளவு உப்பு.

முதலில் உருளைக்கிழங்கை பச்சையாகவே தோல் சீவி, துருவிக் கொள்ள வேண்டும். துருவிய உருளைக்கிழங்கில் இருந்து, தண்ணீர் விடும். ஆகையால், இந்த உருளைக்கிழங்கை உங்கள் கைகளால் எடுத்து, நன்றாக தண்ணீரை பிழிந்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு தண்ணீரோடு இருந்தால் மொறுமொறுவென்று வடை வராது.

potato

அடுத்ததாக, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் போல உப்பு சேர்த்து நன்றாக பிசைந்தால், தண்ணீர் விட ஆரம்பிக்கும். இந்த வெங்காயத்தோடு, துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்க்கவேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். (ஏற்கனவே வெங்காயத்தில் உப்பு சேர்த்துள்ளோம். உப்பை கொஞ்சமாக போட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.)

- Advertisement -

இறுதியாக, கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்தால் எல்லா பொருட்களும் லேசாக ஒட்டிய பதத்திற்கு வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் கான்பிளவர் மாவு இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பார்க்கும்போது உதிரி உதிரியாக தெரிந்தாலும். இந்த கலவையை, உருண்டையாக பிடித்து, லேசாக தட்டி, வடை போல் எண்ணெயில் விட்டீர்கள் என்றால், மொறுமொறுவென்று வடை தயாராகிவிடும்.

vadai1

இந்த வடை மாவு பிசைவதற்கு தண்ணீரை ஊற்ற வேண்டாம். வெங்காயத்திலிருந்து வரும் தண்ணீரே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெயில் பொரிக்கும் போது, தீயை மிதமாக வைத்து, வடையை விட வேண்டும். இல்லையென்றால் வடையின் உள்பகுதி வேகாமல் இருக்கும். எண்ணெயில் விட்ட வடை, பொன்னிறமாக வந்ததும், எண்ணெயை நன்றாக வடித்து விட்டு, எடுத்து சூடாக பரிமாறினால்,  வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே
வாழைக்காயை இப்படி பொடிமாஸ் செய்து பாருங்கள். எல்லா சாப்பாடுக்கும் ஏற்ற செம்ம சைட் டிஷ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.