வெஜ் கோலா உருண்டையை இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் கூட, இனி இந்த வெஜ் கோலா உருண்டைக்கு அடிமை தான்.

- Advertisement -

முன்பெல்லாம் நமக்கு கோலா உருண்டை என்று சொன்னாலே அது மட்டனில் செய்யப்படும் கோலா உருண்டை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இப்போதெல்லாம் அசைவம் சேர்க்காமல் பல கோலா உருண்டைகள் வந்து விட்டது. அந்த வகையில் மீல் மேக்கரை வைத்து செய்யப்படும் இந்த கோலா உருண்டையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் இதோ உங்களுக்காக கோலா உருண்டை ரெசிபி.

வெஜ் கோலா உருண்டை செய்ய தேவையான பொருள்:
மீல் மேக்கர் -100 கிராம், பொட்டுக்கடலை -100 கிராம், பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் – 2, பூண்டு பல் – 3 இஞ்சி -1 சிறிய துண்டு, பட்டை – 2 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் -2, மிளகாய் த்தூள் – 1 ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், புதினா இலைகள் – 20, கொத்தமல்லி – 1 கைப்பிடி, எண்ணெய் 250 கிராம்.

- Advertisement -

அசைவ கோலா உருண்டை செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் எடுத்து வைத்து மீல்மேக்கரில் போட்டு அடுப்பை அணைத்து விட்டு, 10 நிமிடம் மூடி போட்டு வைத்து வைத்து விடுங்கள். இந்த சூட்டிலே மீல் மேக்கர் வெந்து விடும். பத்து நிமிடம் கழித்து பீல் மேக்கரை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

இப்போது கோலா உருண்டை செய்ய மசாலாவை தயார் செய்து கொள்வோம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, பட்டை, இலவங்கம், ஏலக்காய் தூள், அனைத்தையும் சேர்த்து நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இது நல்ல பவுடராக அரைப்பட்டால் தான் கோல உருண்டையை நன்றாக வரும் இல்லை என்றால் எண்ணெயில் போட்டவுடன் வெடித்து விடும்.

- Advertisement -

அடுத்ததாக தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்த மீல்மேக்கரை மிக்ஸியில் போட்டு அத்துடன் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு இரண்டு, மூன்று பல்ஸ் விட்டாலே போதும் தேங்காய் துருவல் போல உதரி உதரியாக வந்து விடும். பைன் பேஸ்ட்டாக அரைக்க கூடாது.அரைத்த மீல் மேக்கரையும் பொட்டுக் கடலை மசாலா இரண்டையும் ஒரு பவுலில் சேர்த்து கொள்ளுங்கள். இதன் பிறகு இதில் வெங்காயம், புதினா, கொத்த மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்த பிறகு உப்பை போட்டு தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு தேவையான சைஸில் உருண்டைகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு எடுத்து விடுங்கள். ஒரு வேலை இந்த உருண்டையில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு கெட்டியாக இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெரைட்டி ரைஸ்க்கு தொட்டுக்க காரசாரமான தேங்காய் துவையல் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, சாப்பிடும் பொழுதே நாவிற்கு இதமாக இருக்குமே!

இந்த வெஜ் கோலா உருண்டையை ஒரு முறை செய்து சாப்பிட்டு விட்டால் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் செய்யும் ஸ்னாக்ஸ் இதுவாக தான் இருக்கும்.

- Advertisement -