வெரைட்டி ரைஸ்க்கு தொட்டுக்க காரசாரமான தேங்காய் துவையல் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, சாப்பிடும் பொழுதே நாவிற்கு இதமாக இருக்குமே!

karuvepilai-thengai-thuvaiyal_tamil
- Advertisement -

இட்லி, தோசை மட்டும் அல்லாமல் எல்லா வகையான வெரைட்டி ரைஸ்க்கும் தொட்டுக் கொள்ள துவையல் சரியான காம்பினேஷன் ஆக இருக்கும். எந்த வகையான துவையல் அரைத்தாலும், ரசித்து ருசித்து சாதத்தை சாப்பிடலாம். அந்த வகையில் அட்டகாசமான சுவையுடன் கூடிய இந்த தேங்காய் துவையலை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க, நீங்களே இனி அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுருவீங்க! டேஸ்ட்டியான தேங்காய் துவையல் பாரம்பரியமான முறையில் எப்படி எளிதாக அரைப்பது? என்பதைத் தான் சமையல் குறிப்பு தகவலாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – ஒரு கப், வர மிளகாய் – 10, காஷ்மீரி மிளகாய் – 3, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
முத்தின தேங்காயாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இளம் தேங்காய் துவையல் செய்வதற்கு உதவாது. தேங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு வருமாறு பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் இரண்டும் சேர்த்து செய்யும் பொழுது நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும். காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் விட்டுவிடலாம். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரியும் முன்னரே வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். இரண்டும் ஒரு சேர பொரிந்து வதங்கி வரும் பொழுது நீங்கள் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உளுத்தம் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை பச்சையாக சேர்த்து வதக்குங்கள். பிறகு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது புளி மற்றும் உப்பு தேவையான அளவிற்கு சேர்த்து வதக்குங்கள். தேங்காயின் ஈரப்பதம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் உதிரி உதிரியாக பொலபொலவென வந்தவுடன் நீங்கள் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த சட்னியை எதில் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள முற்றிலும் வித்தியாசமான ஆரோக்கியம் தரும் சட்னி ரெசிபி.

நன்கு இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒரு முறை சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக துவையல் போல அரைத்து எடுக்க வேண்டும் நைசாக அரைக்க கூடாது. கொரகொரன்னு இருக்கணும், அப்போது தான் தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த அற்புதமான தேங்காய் துவையல் பாரம்பரியமான முறையில் செய்யப்படுகிறது. இதே மாதிரி நீங்களும் உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள், எல்லா விதமான சாதத்துக்கும் தொட்டுக்க இதமாக இருக்கும்.

- Advertisement -