2021 புத்தாண்டு பலன்கள் – மீனம் ராசி

new-year-meenam

மீன ராசிக்காரர்களுக்கு செல்ல இருக்கும் 2020ஆம் ஆண்டு நிறைய பிரச்சனைகளை கொடுத்திருக்கும். இதன் பிறகு வர இருக்கும் 2020-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு நிச்சயமாக அனைவரிடமும் இருக்கும். அவ்வகையில் மீன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். உங்களுடைய ராசிக்கு சனி பகவான் பதினோராம் இடத்தில் இருந்து கொண்டு, ஐந்தாவது இடத்தை பார்வையிடுகிறார். அங்காரகன் தொடக்கத்தில் இரண்டாம் வீட்டில் இருந்து, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெயர்ச்சியும் ஆகிறார். ராகு மூன்றிலும், கேது ஒன்பதிலும் இருப்பார்கள். இந்த கிரக அமைப்புகளின் படி உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கப் போகிறது.

Meenam Rasi

குடும்பம்:
குடும்பத்தை பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய அருள் நிச்சயமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறும் காலம் இது. சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக அமைய இருக்கிறது. ஒருவரால் ஒருவர் முன்னேற்றத்தை காண்பீர்கள். அவர்களின் ஆதரவு எப்பொழுதும் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிக்கல்கள் நீங்கி, பரஸ்பர புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்திலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் சில சிக்கல்களை சந்திக்கலாம். அதனை தைரியமாக எதிர் கொண்டால் இந்த ஆண்டு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் சூரியனுடன் புதன் இருக்கும் சேர்க்கையானது சிறப்பான பலன்களை கொடுக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறும். இதுவரை மந்த நிலையில் இருந்த வியாபாரம் கூட சூடு பிடிக்க துவங்கி விடும். இதன் மூலம் நல்ல லாபம் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் உச்சத்தைத் தொடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டம் சாதகமான பலன்களை கொடுக்கும்.

job

உத்தியோகம்:
உத்தியோகத்தை பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமான காலமாக அமைய இருக்கிறது. திடீர் அதிர்ஷ்டங்கள் மற்றும் யோகமும் வந்து சேரும். நினைத்தபடி நினைத்த இடத்திற்கு வேலையும், இடமாற்றமும் அமைய காத்திருக்கிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமையை மேலதிகாரிகளும், உங்களுடன் பணிபுரியும் சக பணியாளர்களும் புரிந்து கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் அமையும். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். ஒவ்வொரு மாதமும் ஏற்றத்துடன் காணப்படும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகும். காலமும், நேரமும் சரியாக இருக்கும் பொழுது, திடீர் ராஜயோகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசியிலிருந்து 12-ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கும் பொழுது உங்கள் தேவைகள் அனைத்தும் எளிதாக பூர்த்தியாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பீர்கள்.

money

பெண்களுக்கு:
பெண்களைப் பொறுத்தவரை மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக விடுபடும் காலம் என்று கூறலாம். உங்கள் மனதில் அழுத்திக் கொண்டு இருந்த விஷயங்கள் எல்லாம் தெளிவாகி, லேசாக உணர்வீர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குணத்திற்கு ஏற்ப நல்ல பொருத்தமான வரன்களும் அமையும். திருமணமான பெண்களுக்கு கணவனுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல ஒற்றுமை இருக்கும்.

vadai-malai-hanuman

பரிகாரம்:
மீன ராசிக்காரர்கள் இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும். வியாழன் கிழமையில் மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்துவதால் அதிர்ஷ்டம் ஏற்படும். சனிக்கிழமையில் ஹனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடக்கும்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – கும்பம் ராசி

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்