மீதமான சாதத்தில் ஒரு முறை இப்படி இட்லி செய்து பாருங்களேன். இட்லி மாவில் சுட்டால் கூட, இப்படி ஒரு இட்லி நமக்கு கிடைக்காது.

idli
- Advertisement -

நிறைய பேர் மீதமான சாதத்தை வீணாக தூக்கி குப்பையில் கொட்டுகிறார்கள். சாப்பிடும் சாப்பாட்டை முடிந்தவரை வீணாக்காதீர்கள். நீங்கள் சாப்பிடவில்லை. சாதம் மிஞ்சி விட்டது என்றால் கூட, அந்த சாதத்தை பசு மாடு நாய் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடக் கொடுங்கள். உங்கள் வீட்டில் சாதம் மீதம் ஆகிவிட்டது. மீதமான சாதத்தை வைத்து சுட சுட சூப்பரான இட்லியை 15 நிமிடத்தில் எப்படி செய்வது. தெரிந்து கொள்வோமா.

1 கப் அளவு சாதம் மீதமாகிவிட்டால், அதே 1 கப் அளவு ரவையை எடுத்துக்கொள்ளுங்கள். 1 கப் சாதம், 1 கப் ரவை சரியான அளவாக இருக்கும். அதாவது எந்த அளவிற்கு சாதத்தை எடுக்கிறார்களோ, அதே கிண்ணத்தில் அதே அளவு ரவையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கப்பில் 1 கப் அளவு தயிரையும் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ரவையை ஒரு கடாயில் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வருத்த ரவை அப்படியே இருக்கட்டும்.

idli-rava

அடுத்தபடியாக மீதமான சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு ரொம்பவும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சாதத்தை மொழுமொழுவென அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பு: நிறைய தண்ணீர் ஊற்றி சாதத்தை தண்ணியாக அரைத்து விட வேண்டாம். கொஞ்சம் கெட்டிப் பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த சாதத்தை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். அரைத்த இந்த சாதத்துடன் வறுத்த ரவையை கொட்டி, 1 கப் அளவு தயிரை ஊற்றி, கலந்து விடவேண்டும். ரவையை கட்டி படாமல் கலக்கி விடவேண்டும். இறுதியாக இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து மாவை ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள்.

அரைத்து இருக்கும் சாதத்தின் விழுது, ரவை, தயிர் மூன்றும் சேர்ந்து ஒன்றாக ஊறிய பின்பு, இட்லி வார்க்கும் போது 1/2 ஸ்பூன் ஆப்ப சோடாவை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு எப்போதும் போல இட்லி தட்டில் இட்லி ஊற்றி வைக்கவேண்டும்.

idli-mavu

இட்லி வார்க்கும்போது மாவு ரொம்பவும் கட்டியாக இருக்குமேயானால் கொஞ்சமாக இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இட்லி ஆவியில் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அவ்வளவு தாங்க. சூப்பரான சுடச்சுட சாஃப்டான இட்லி தயார்.

Idli

தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதத்தில் கூட இந்த இட்லியை செய்யலாம். ஆனால் பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து இருந்தால், அந்த தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சாதத்தை பக்குவமாக அரைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சூப்பர் இட்லி ரெசிபி இது.

- Advertisement -