- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா இனி மீதமான சின்ன சோப்பு துண்டை கூட வேண்டாம்...

இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா இனி மீதமான சின்ன சோப்பு துண்டை கூட வேண்டாம் என்று தூக்கி போடவே மாட்டீங்க. மீதமான சோப்பை வச்சு செலவே இல்லாமல் சூப்பரா கேண்டில் தயாரிக்கலாம் வாங்க.

- Advertisement -

நாம் வீட்டில் தேவை இல்லை என நினைத்து தூக்கிப் போடும் பல பொருள் மறுப் பயன்பாட்டிற்கு உகந்தது தான். இது பல பேருக்கு தெரிவதில்லை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் குளிக்க பயன்படுத்தும் மீதமான சோப்புகளை வைத்து அழகான கேண்டில்களை எப்படி செலவே இல்லாமல் தயாரிப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த குறிப்பை நீங்களும் தெரிந்து கொண்டால் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன் வீட்டை அலங்கரிக்கவும் கொஞ்சம் கூட பணத்தை செலவழிக்க வேண்டாம். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

எல்லோர் வீட்டிலும் குளிக்கும் சோப்பு கரைந்து கடைசியில் சின்ன துண்டுகளாக நின்று விடும். அதை நாம் எதற்குமே பயன்படுத்தாமல் வீணாக தூக்கி கீழே தான் போட்டு விடுவோம். முன்பெல்லாம் ஒரு சோப்பு தான் அனைவரும் பயன்படுத்துவார்கள. இப்போது அப்படி இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சோப்பு பயன்படுத்துகிறார்கள். அப்போது அதிக அளவு சோப்புத் துண்டுகள் மீதமாகும் அதை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கேண்டில் எரிந்து முடிந்த பிறகு உருகிய மெழுகு துண்டுகளையும் தூக்கி கீழே வீசி விடுவோம். இனி அப்படி தூர போடாமல் அதையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இனி கேண்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

அதற்கு முதலில் மீதமான சோப்பு துண்டுகளை காய் சீவும் சீவலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் மீதமான கேண்டில் துண்டுகளையும் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் துருவிய சோப்பு, கேண்டில் தூள் இரண்டையும் சேர்த்த பிறகு இவைகள் மூழ்கும் வரை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து சூடு படுத்துங்கள். கேண்டில் இதில் சேர்ந்து இருப்பதால் நன்றாக உருகி சோப்புடன் கரைந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். இந்த பதம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

அதே போல் எல்லோர் வீட்டிலும் கேண்டில் எறிந்த பிறகு அதன் ஸ்டாண்ட் இருக்கும். அப்படி இல்லை என்றால் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி எதுவும் உங்களிடம் இல்லை என்றால் டீ குடிக்க பயன்படுத்தும் டீ கப்புகள், கண்ணாடி டம்ளர் போன்றவைகளையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் எடுத்திருக்கும் டீ கப் அல்லது கேண்டில் ஸ்டாண்ட் விளக்கு எதுவாக இருந்தாலும் முதலில் அதில் முதலில் விளக்கு திரியை வைத்து விடுங்கள். அதன் பிறகு தயார் செய்த அந்த பேஸ்ட்டை எடுத்து வைத்திருக்கும் பொருளில் போட்டு திரி உள்ளே சென்று விடாமல் அழுத்தி விளக்கு போல செய்து கொள்ளுங்கள். இதில் ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் நாம் கவனமாக செய்ய வேண்டும். இதை அடுப்பில் இருந்து இறக்கியதும் மிதமான சூட்டில் இருக்கும் பொழுதே, உருக்கிய பேஸ்ட்டை நீங்கள் கேண்டில் வடிவிற்கு மாற்றி விட வேண்டும். இல்லை என்றால் கெட்டியாகி விடும் பிறகு மறுபடியும் சூடு படுத்தி பண்ண வேண்டியதாக இருக்கும்.

சோப்பை உருக்கி மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் சேர்த்த பிறகு, இதை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து எடுத்து விடுங்கள். உருகிய மெழுகு, சோப்பு அனைத்தும் உடனே அதில் செட் ஆகி நல்ல ஒரு அழகான கேண்டிலாக தயாராகி விடும். இந்த கேண்டில் நீங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம். வரவேற்பறை, சமையலறை, படுக்கையில் என எங்கு வைத்தாலும் வெளிச்சமாக இருப்பதுடன், இதில் சோப்பு கலந்து இருப்பதால் வீடு முழுவதும் நல்ல நறுமணத்துடன் இருக்கும். இப்படி நறுமணத்துடன் இருந்தாலே பூச்சி, கொசு போன்றவை எல்லாம் கூட அண்டாது.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு சுத்தம் செய்தாலும் உங்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறதா? வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்தே துர்நாற்றம் முழுவதையும் நீக்கி விடலாம்.

இனி தேவையே படாது என நினைத்து எப்போதும் தூக்கி போடும் இந்த பொருட்களை வைத்து ரொம்பவே அழகான கேண்டில் தயார் செய்து விட்டோம்.  ஒரு பைசா கூட நாம் செலவு செய்யாமலே வீட்டையும் அழகாக டெக்ரேட் செய்து விடலாம். இந்த குறிப்பு உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். கட்டாயமாக நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்