எவ்வளவு சுத்தம் செய்தாலும் உங்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறதா? வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்தே துர்நாற்றம் முழுவதையும் நீக்கி விடலாம்.

bathroom thurnatram
- Advertisement -

ஒரு வீட்டில் சமையல் அறை என்பது எவ்வளவு முக்கியமோ எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ அதே அளவுக்கு முக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டியது கழிவறை. கழிவறை சுத்தம் இல்லை என்றால் எக்கச்சக்கமான நோய்கள் வர வாய்ப்புண்டு. அதே சமயம் சில வீடுகளில் கழிவறை சுத்தமாக இருந்தாலும் அதில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். இப்படியான துர்நாற்றங்களை எளிதில் போக்கவும் கழிவறையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்யவும் ஒரு எளிமையான குறிப்பை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

நமது சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு காரணமாக கழிப்பிடமானது உப்பு படித்ததாக இருக்கும். அதை நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது நிச்சயம் சுத்தம் செய்தாக வேண்டும். அப்படி சுத்தம் செய்த பிறகு அந்த கழிப்பிடத்தில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க தொடர்ச்சியாக மூன்று முதல் நான்கு நாட்கள் ஏதாவது ஒரு டால்கம் பவுடரை போட்டு பிளஷ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் கழிப்பிடத்தில் இருந்து வரக்கூடிய துர்நாற்றமானது விலகிவிடும்.

- Advertisement -

இதற்கு அடுத்ததாக நமது கழிவறையில் பயன்படுத்தக்கூடிய பக்கெட் பெரும்பாலும் அழுக்காக உப்பு படித்ததாக காணப்படும். இதை போக்குவதும் மிக மிக எளிதான ஒன்றுதான். நாம் துணி துவைக்க பயன்படுத்தும் சர்ப் பவுடர், சிறிதளவு வினிகர் மற்றும் இனிப்பு சோடா இவை மூன்றையும் ஒரு கலவையாக கலந்து அந்த கலவையைக் கொண்டு பக்கெட்டின் அடிப்பகுதியை தேய்த்தால் அதில் இருக்கும் உப்பு கரையானது எளிதில் வந்து விடும்.

அதேபோல தற்காலத்தில் சிலர் கழிவறையில் கண்ணாடியை வைத்து வீடுகட்டுவதும் உண்டு. கழிவறையின் மற்ற பகுதிகளில் எப்படி அதிகம் அழுக்கு சேர்கிறதோ அதேபோன்று கழிவறை கண்ணாடியிலும் அவ்வப்போது அதிகப்படியான அழுக்கு சேர்வது வழக்கம். இந்த கழிவறை கண்ணாடியின் அழுக்கை போக்குவதற்கு நாம் தினமும் படிக்கும் செய்தித்தாளே போதுமானது. முதலில் கழிவறை கண்ணாடியில் தண்ணீரை தெளித்து அதற்கு மேல் செய்தித்தாளை கொண்டு துடைத்தாலே போதும் கழிவறை கண்ணாடியில் உள்ள அழுக்குகள் அப்படியே வந்துவிடும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:10 பைசா செலவில்லாமல் பத்தே நிமிஷத்தில் வீட்டில் இருக்கும் மொத்த கொசுவையும் விரட்டி அடிப்பது எப்படி? 100% ரிசல்ட் தரும் இயற்கை கொசு விரட்டி!

அதேபோல பாத்ரூமில் உப்பு கரை படிந்திருக்கும் குழாய்களை சுத்தம் செய்ய நாம் தினமும் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டே போதுமானது. இந்த பேஸ்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து ஸ்க்ரப்பரைக் கொண்டு தேய்த்தால் குழாயில் உள்ள உப்பு கரை நீங்கிவிடும் இதே முறையில் பாத்ரூமில் உள்ள வாஷ்பேஷனையும் சுத்தம் செய்யலாம்.

- Advertisement -