- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வழிபாடு

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வழிபாடு

- Advertisement -

மனிதர்களுக்கு இப்போது கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்ற கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றலின் மீது நம்பிக்கை மிக மிக அதிகமாக இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு கஷ்டம் வந்துவிட்டால் போதும். யாரோ எனக்கு சூனியம் வைத்து விட்டார்கள். கண் திருஷ்டி வைத்து விட்டார்கள் என்று, அவர்களாகவே எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு பிரச்சனைகளை இழுத்து விடுகிறார்கள்.

முதலில் இது போன்ற விஷயங்களில் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பது தவறு. அதற்காக கண்திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் எல்லாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. இருந்தாலும், எல்லோருக்கும் வரக்கூடிய கஷ்டத்திற்கு இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டு, நம்முடைய மனதை அலைபாய விடக்கூடாது.

- Advertisement -

உங்களுக்கும் இதுபோல பிரச்சனை இருக்கிறது வீட்டில் உள்ளவர்களுக்கு கண் திருஷ்டி கோளாறு, அமானுஷ்ய சக்திகளின் தொல்லை யாரோ ஏவல் பில்லி சூனியம் வைத்து விட்டார்கள். வீட்டில் பேய் பிசாசு இருக்கிறது என்று பயந்து கொண்டு யாரிடமாவது சென்று ஏமாறாதீங்க. பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாக இருக்கிறது.

ஏடாகூடமாக போய் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்த தகவல். உங்களுக்கு இதுபோல பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் இறை வழிபாடு செய்வது மட்டுமே முற்றிலுமான தீர்வை பெற்று தரும். அந்த வகையில் எதிர்மறை ஆற்றலால் தாக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டிய கோயில் என்ன தெரியுமா?

- Advertisement -

செஞ்சி அருகில் இருக்கக்கூடிய மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்தான். பெரும்பாலும் இந்த கோவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசை அன்று இந்த கோவிலுக்கு சென்று அங்காள பரமேஸ்வரியை வழிபாடு செய்தால், மனதில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. ஆனால் அமாவாசை அன்று அந்த கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்வது அவ்வளவு சிரமம். கூட்டம் இருக்கும்.

அந்த கும்பலில் போய் சிக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண நாட்களிலேயே அந்த கோவிலுக்கு செல்லுங்கள். 6 எலுமிச்சம் பழம் வாங்கிக் கொண்டு, போய் நீங்களே அம்மன் மடியில் வைக்கலாம். எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு அம்பாளை நினைத்து பிரார்த்தனை செய்து அம்பாள் மடியில் பழங்களை வைக்க வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை திரும்பி வாங்கவும் கூடாது.

- Advertisement -

பிறகு அந்தக் கோவிலில் சன்னி முனிவர் மேடை என்ற ஒரு இடம் இருக்கிறது. அந்த மேடையில் சிறிது நேரம் அமர்ந்து, வந்தால் நம் உடம்பை பிடித்த கெட்ட சக்திகள் அனைத்தும், கண் திருஷ்டி அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. சில பேருக்கு பேய் பிசாசு பிடித்து விட்டது.

ரொம்பவும் உக்கிரமாக இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லுவோம். அப்படி பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், அந்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்று அந்த கோவில் தீர்த்தத்தில் நீராடி ஈரத்துணியோடு அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் பூசாரி கபால தீர்த்தத்தை, பாதிக்கப்பட்ட நபரின் மீது தெளித்து விடுவார்.

இப்படி செய்தாலும், உடம்பை பிடித்து ஆட்டிப்படைக்கும் துஷ்ட சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. மிக மிக அதீத சக்தி வாய்ந்த அம்மன் இவள். இவளிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலாக வைத்தால், அது நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்பே இல்லை. எதிரிகளை அழிக்க கூடியவள். கண் திருஷ்டிகளை விளக்கக்கூடியவள், கெட்ட சக்திகளை அழிக்க கூடியவள்.

இதையும் படிக்கலாமே: துஷ்ட கிரகங்கள் விலக ஹனுமன் மந்திரம்

இத்தனை அற்புதம் வாய்ந்த இந்த திருத்தலத்திற்கு வாய்ப்பு உள்ளவர்கள் சென்று அந்த அம்பாளை வழிபாடு செய்யலாம். அங்காள பரமேஸ்வரியின் அருளால் உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்