வாயில் வைத்த உடனே கரைந்துவிடும் இந்த சுவையான கோதுமை அல்வாவை எப்படி சுலபமாக செய்வது என்று தெரியுமா?

halwa
- Advertisement -

காரம் பிடிக்காதவர்கள் என்று சிலர் இருப்பார்கள். ஆனால் இனிப்பு பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள். இனிப்பு சுவை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி வீட்டில் விசேஷம் என்றாலும், பிறந்த நாள், திருமண நாள், போன்ற முக்கியமான நாட்களிலும் பண்டிகைகளின் பொழுதும் இனிப்பு செய்து, அனைவருடன் பகிர்ந்து சாப்பிடுவது தான் தமிழர் பண்பாடாக இருக்கிறது. அவ்வாறு இனிப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இனிப்பு உணவுகளை சமைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகவும், அதை செய்வதற்கு நேரமும் அதிகமாக செலவாகும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சுவையான கோதுமை அல்வா செய்வதற்கு மிகவும் குறைந்த பொருட்களும், குறைந்த நேரமும் இருந்தால் போதும். இந்த சுவையான அல்வாவை செய்து சுடச்சுட பரிமாறிக் கொடுத்துப் பாருங்கள். வாயில் வைத்தது தெரியாமல் தொண்டையில் மிருதுவாக இறங்கிவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – கால் கிலோ, சர்க்கரை – முக்கால் கிலோ, எண்ணெய் – அரை கிலோ, நெய் – 100 கிராம், முந்திரிப் பருப்பு – 100 கிராம், ஏலக்காய் – 10, கேசரி பவுடர் – அரை ஸ்பூன்.

- Advertisement -

கோதுமை அல்வா செய்முறை:
முதலில் 10 ஏலைக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கேசரி பவுடரில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, கால் கிலோ கோதுமை மாவை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி படாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். கோதுமை மாவு எண்ணெயில் நன்றாக கரைந்து 5 நிமிடத்திற்கு எண்ணெயிலேயே வேக வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் கரைத்து வைத்துள்ள கேசரி பவுடரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு கடாயை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்க வேண்டும். பின்னர் கொதிக்க வைத்து எடுத்து வைத்துள்ள தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு கடையை மீண்டும் அடுப்பின் மீது வைத்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு முக்கா கிலோ சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் பொடி செய்து வைத்துள்ள ஏலைக்காய் பவுடரை சேர்த்து கலந்து விடவேண்டும். இறுதியாக 100 கிராம் நெய் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் சேர்த்த எண்ணெய் அனைத்தும் மேலே வர ஆரம்பிக்கும். இப்பொழுது சுவையான கோதுமை அல்வா தயாராகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -