மேஷ லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை உண்டாக இதை செய்ய வேண்டும்.

mesham
- Advertisement -

அதிர்ஷ்டம் என்கிற வார்த்தையை கேட்கும் போதே நம் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அனைவருக்குமே வாழ்வில் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் ஏற்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற முடியும். எந்த ஒரூ ஜாதகருக்கும், அவரின் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப அமையும் அவரது ஜாதக அமைப்பை கொண்டே அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தை கணிக்க முடியும். அந்த வகையில் இங்கே மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களும் பெற செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

jathagam astro

ஒரு நபருக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை அவரின் ஜாதகத்தில் இருக்கும் ஒன்பதாவது வீட்டை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த 9 ஆம் வீட்டின் அதிபதி உச்சம் ஆகியிருந்தாலும், அந்த 9 ஆம் இடத்தில் சுபகிரகங்கள் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ இருந்தாலும், அந்த 9 ஆம் இடத்தை சுபக்கிரகங்கள் பார்த்தாலும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

12 லக்னங்களில் முதலாவது லக்னமாக வருவது மேஷ லக்னம் ஆகும். இந்த மேஷம் நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உரிய ராசி மற்றும் லக்னம் ஆகிறது. சூரியனின் உச்ச ராசி மற்றும் லக்னமாகவும் இருக்கிறது. இந்த மேஷ லக்னத்திற்கு ஒன்பதாவது வீடாக வருவது தனுசு ராசி ஆகும். தனுசு ராசிக்கு உரிய நவகிரக அதிபதி குரு பகவான் ஆவார். மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்கள் ஏற்பட குரு பகவானின் அருளை பெறுவதற்கு கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.

guru-bagawan

முழு சுப கிரகமாக இருக்கும் குரு பகவான் வேதங்கள் மற்றும் வேதங்களை கற்றறிந்த பிராமணர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார். மேலும் உயர்வான பொருட்கள் மற்றும் இன்ன பிற உயர்வான விடயங்களிலும் குரு காரகத்துவம் நிறைந்திருக்கிறது. எனவே பசு மாடு அல்லது காளை மாடு ஒன்றை கோவிலுக்கோ அல்லது வேதமறிந்த பிராமணருக்கோ தானம் அளிப்பது குரு பகவானின் முழுமையான அருளை உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -

feeding birds

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிவபெருமான் மற்றும் குரு பகவானை வழிபாடு செய்வது வழக்கமாக்கி கொள்ள வேண்டும். வசதி குறைந்தவர்கள் மற்றும் கோயில்களுக்கு மஞ்சள், மஞ்சள் நிற ஆடைகள், பழங்கள் போன்றவற்றை தானம் அளிப்பது அதிர்ஷ்டகளை அதிகரிக்கும். குரு பகவானின் கடாட்சம் நிறைந்த யானை, குதிரை, எருது, மயில் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அடிக்கடி உணவு அளித்து வந்தால் உங்களின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha lagna yogam in Tamil. It is also called as 12 lagnas in Tamil or Jodhidam yogam in Tamil or Guru pariharam in Tamil or 9th house in jathagam in Tamil.

- Advertisement -