உங்களுடைய முடி உதிர்வை நிறுத்தி, முடியை சீக்கிரமே வளரச் செய்ய இதைவிட, சிம்பிளான சூப்பரான டிப்ஸ் இருக்கவே முடியாது. 30 நாட்கள் முயற்சி செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.

hair8
- Advertisement -

முடி உதிர்வை கட்டுப்படுத்த, முடி வளர்ச்சியை அதிகரிக்க, பல வகையான குறிப்புகள் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் எல்லா குறிப்புகளும் எல்லோருக்குமே பலனளிக்காது. அந்த வரிசையில் எல்லா வகையான உடல் சூழ்நிலைக்கும் ஏற்ற ஒரு சுலபமான குறிப்பை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தற்சமயம் நிலவி வரும் லாக்டவுன் சூழ்நிலையில் எல்லோரும் வீட்டில் இருப்பதற்கான கொஞ்ச நேரம் கிடைத்திருக்கின்றது. இந்த நேரத்தை நம்முடைய முடியை வளரச் செய்ய கொஞ்சம் பயன்படுத்திக் கொள்வோமே.

vendayam

இந்த ரிமெடிக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள், நம் வீட்டில் இருக்கும், நம் சமையலறையில் இருக்கும் வெந்தயம், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, இந்த 3 பொருட்கள் தான். சில பேர் வீடுகளில் விளக்கு எண்ணெய் இருக்காது. விளக்கெண்ணெய் இல்லாத பட்சத்தில் வெளியே சென்று இதை வாங்க வேண்டாம். தேங்காய் எண்ணெயில் மட்டும் தற்சமயம் செய்து கொள்ளுங்கள். லாக் டவுனில் தளர்வு ஏற்படும்போது விளக்கெண்ணெய் சேர்த்து இந்த ரெமிடியை தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் காய்ந்த மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதை சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும். நைசாக இருக்கும் வெந்தய பவுடர் தான் நமக்கு தேவை. அரைத்து சலித்து இந்த வெந்தய பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

fenugreek-powder

அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் 30 ml அளவு தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டால், 20ml அளவு விளக்கெண்ணை தேவைப்படும். இந்த இரண்டு எண்ணெயையும் ஒன்றாக, ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயோடு 2 ஸ்பூன் நைசாக அரைத்து வைத்திருக்கும் வெந்தய பவுடரை சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணெயினை 10 நிமிடங்கள் டபுள் பாயில் மெத்தடில் சூடு செய்யப் போகின்றோம். அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, அது நன்றாக சூடானதும், அந்த சுடு தண்ணீரின் மேல், வெந்தயம்பொடி கலந்த எண்ணெய் இருக்கும் கிண்ணத்தை வைத்து, 10 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். அதன் பின்பு அந்த எண்ணெயை கீழே இறக்கி வைத்து, நன்றாக ஆற விட்டு விடுங்கள். எண்ணெய் நன்றாக ஆறியதும், ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.

hair7

முடிந்தால் இந்த எண்ணெயை ஒரு மூடி போட்டு மூடி, ஒரு மணி நேரம் வரை வெய்யிலில் வைத்து விட்டு அதன் பின்பு நம் வீட்டிற்குள் ஸ்டோர் செய்து கொள்வது நல்லது. இந்த எண்ணெய் பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. 30 நாட்கள் வரை இந்த எண்ணெயை வெளியில் வைத்தாலே நன்றாக இருக்கும்.

fenugreek-oil

கைபடாமல் இந்த எண்ணெய்யை ஒரு ஸ்பூனில் எடுத்து உங்களுக்கு தேவையான அளவு சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த வெந்தய எண்ணெயை விரல்களால் தொட்டு உங்களுடைய தலைமுடிகளில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவிட்டு பின்பு தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் இதை செய்வதால் நல்ல பலனைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக முடி வளர்ச்சியில், முடி உதிர்வில் வித்யாசம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -