ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் – வாஹன் புகழாரம்

vaughan

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்துள்ளது. இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 622 ரன்களை குவித்துள்ளது. இதனை அடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

pant

இந்திய அணி சார்பாக புஜாரா 193 ரன்கள் குவித்தார் அடுத்த படியாக ஆட்டமிழக்காமல் 159* ரன்களை விளாசினார் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இவர்களின் சதத்தால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் உள்ளது என்றே கூறவேண்டும்.

ரிஷப் பண்ட் அடித்த இந்த அதிரடி சதம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாஹன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டீவீட் செய்துள்ளார். அதில், பண்ட் தான் கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அவரது திறமை, பேட்டிங் மற்றும் ஸ்டம்ப்க்கு பின்னால் இருந்து பேசும்திறன் போன்றவை மிகவும் நன்றாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

தோனி சரியான மாற்று வீரர் இவரே என்று ரசிகர்களும் கூறிவருகின்றனர். வளர்ந்து வரும் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் கடந்த வருடம் நடந்த IPL போட்டிகள் மூலம் தனது திறமையினை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கோலியை திட்டிய ஆஸி ரசிகர்கள். ஆஸி ரசிகர்களை கடிந்த பாண்டிங்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்