கோலியை திட்டிய ஆஸி ரசிகர்கள். ஆஸி ரசிகர்களை கடிந்த பாண்டிங்

aus-fans

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட துவங்கியது. துவக்க ஆட்டக்காரர் ராகுல் விரைவில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு அகர்வால் மற்றும் புஜாரா சிறப்பாக ஆடினர். இந்நிலையில் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அகர்வால் தேவை இல்லாமல் தூக்கி அடித்து வெளியேறினார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் கோலி களம் இறங்க தயாரானார்.

உடனடியாக தயாராகி மைதானத்தினுள் செல்ல அவர் பெவிலியனில் இருந்து வரும்போது அவரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் திட்டியபடி வரவேற்றனர். கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் திட்டுவது என்பது புதிதல்ல. எப்போது கோலி அவர்களது அணிக்கு எதிரே சிறப்பாக ஆடுகிறாரோ அப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்.

இதனை பார்த்த பாண்டிங் அவர்களது நாட்டு ரசிகர்களுக்கு கூறியதாவது : கோலி போன்ற வீரர்களை நீங்கள் யாரும் திட்ட கூடாது. அவர்கள் நமது நாட்டிற்கு வந்துள்ளார்கள் அவர்களிடம் நாம் அனைவரும் மரியாதையாக நடந்து அவர்களையும் மதிக்க வேண்டும். இது போன்று வசை பாடுவது சரி அல்ல என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

இதையும் படிக்கலாமே :

சிட்னி நகரில் மனைவியோடு நடந்து சென்ற கோலி – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்