காரசாரமான மதுரை ஸ்பெஷல் மிளகாய் சட்னி எப்படி செய்வது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?

kara-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு எத்தனை வகையான சாம்பார் சட்னியை செய்தாலும், காரச்சட்னிக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. நாக்கை இழுத்து இழுத்து காரசாரமாக சாப்பிட கூடிய ஒரு மிளகாய் சட்னியை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதுவும் மதுரை ஸ்பெஷல் கார சட்னி என்று சொன்னால் இதற்கு இன்னும் கூடுதல் சுவை உண்டு. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பக்குவமாக இந்த காரசாரமான சிவப்பு மிளகாய் சட்னி எப்படி அரைப்பது? இப்பவே பார்த்துவிடலாமா.

dry-chilli-milagai

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 5 லிருந்து 6 காரத்திற்கு ஏற்ப, தோலுரித்த சின்ன வெங்காயம் – 20 பல், பெருங்காயம் 1/4 – ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு தோலுரித்து – 15 பல், கொத்தமல்லி தழை – 4 இனுக்கு, தேவையான அளவு உப்பு.

- Advertisement -

முதலில் கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வரமிளகாயை சேர்த்து கருகாமல் சிவக்கும் அளவிற்கு மட்டும் வறுக்க வேண்டும். அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

சின்ன வெங்காயம் பாதி பாகம் வதங்கியவுடன், உரித்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு முக்கால் பாகம் சிவந்தால் போதும். அடுத்தபடியாக பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, இவை மூன்றையும் போட்டு, வதக்கி அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். (சட்னி பச்சை நிறம் மாறும் அளவிற்கு கொத்தமல்லி தழைகளை வைத்து விட கூடாது. சட்னி சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். வாசத்திற்கு தான் கொத்தமல்லித்தழை.)

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, நிறைய தண்ணீர் ஊற்றாமல் விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

milagai-vizhuthu

தேவை ஏற்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, கருவேப்பிலை, தாளித்து இந்த சட்னியை பரிமாறி பாருங்கள். 10 இட்லி தோசை இருந்தால் கூட, வயிறு இன்னும் வேண்டும் என்று கேட்டுக்கும் அளவிற்கு இதன் சுவை சூப்பரா இருக்கோம். நீங்க வேணும்னா ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -