மிளகு சாதத்தை ரொம்ப சூப்பரா பர்ஃபெக்ட்டா செய்யணும்னா இந்த மசாலா சேர்த்து தான் செய்யணும். இப்படி மட்டும் ஒரு முறை செய்யுங்க குழந்தைங்க டெய்லியும் இதையே செஞ்சு தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

pepper-rice4
- Advertisement -

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எல்லாம் திறந்து விட்டார்கள். இதில் பிள்ளைகளை விட பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தான் இப்போது டென்ஷன் அதிகம். காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு டிபன், லஞ்ச் என எதையாவது செய்து கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அது சிம்பிளாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இப்படி உங்க டென்ஷன் குறைக்க ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.

செய்முறை

இந்த சாதம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் சாதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். பெரிய தக்காளி ஒன்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் தயார் செய்த பிறகு இந்த சாதத்திற்கு தேவையான மசாலா அரைத்து விடுவோம்.

- Advertisement -

அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், 20 மிளகு சேர்த்து மிளகு பொரியும் வரை வறுத்த பின் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதே எண்ணெயில் 10 பல் பூண்டையும் சேர்த்து பூண்டு சிவந்து வரும் வரை வதக்கிய பிறகு, கறிவேப்பிலையும் சேர்த்து ஒரு முறை வதக்கி அதையும் தனியாக எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்து வைத்த மிளககை சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வதக்கி வைத்த பூண்டு கறிவேப்பிலை சேர்த்து அதிகமாக அரைக்காமல் பல்ஸ் மோடில் கொஞ்சம் திரித்திரியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஏற்கனவே மிளகு வறுத்த அதே கடாய் வைத்து அதில் இருக்கும் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் சீரகம் அனைத்தையும் சேர்த்து நன்றாக பொரிந்து பருப்பு நிறம் மாறி வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் பொரிந்து வந்த பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளியும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் போட்டு ஒரு கொத்து கறிவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து பின் தக்காளி பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

இந்த சமயத்தில் எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து ஒரு முறை கலந்த பின் அடுப்பை அணைத்து விட்டு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். மசாலாவை சேர்க்கும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும் கடாயின் சூட்டிலே கிளரி விட்டாலே போதும். அதன் பிறகு மேலே கொஞ்சமாக கொத்துமல்லி தழைகளை தூவி விட்டால் சூப்பரான மிளகு சாதம் தயார்.

இதையும் படிக்கலாமே: சுவையான பன்னீர் பட்டர் மசாலா இனி கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று இல்லை! வீட்டிலேயே எப்படி மிக சுலபமாக செய்யலாம் தெரியுமா?

இப்படி மட்டும் மிளகு சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்க குழந்தைங்க இதை வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க. அதே நேரத்துல மிளகின் சத்தும் உடம்புக்கு எளிமையா கிடைச்சிடும். நல்ல ஒரு ஆரோக்கியமான இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை நீங்களும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -