சுவையான பன்னீர் பட்டர் மசாலா இனி கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று இல்லை! வீட்டிலேயே எப்படி மிக சுலபமாக செய்யலாம் தெரியுமா?

paneer-butter-masala_tamil
- Advertisement -

ஈசியாக பன்னீர் பட்டர் மசாலா செய்து கொடுத்தால் தேங்காய் பால் சாதம், சீரக சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்களுக்கும் சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் இனி இதை சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. நம்முடைய வீட்டிலேயே ரொம்ப எளிதாக பன்னீர் பட்டர் மசாலா தயாரிப்பது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம், வெண்ணை – 6 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – 6, முந்திரிப் பருப்பு – 10, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 5 பல், கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி அல்லது கொத்தமல்லி – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்

பன்னீர் பட்டர் மசாலா செய்ய முதலில் 200 கிராம் அளவிற்கு பன்னீர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் எந்த விதமான சாஸ் பொருட்கள் நாம் சேர்க்கப் போவதில்லை. இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் விட்டு காய விடுங்கள்.

வெண்ணெய் காய்ந்து வரும் பொழுது நீங்கள் பன்னீரை உங்கள் விருப்பம் போல ஸ்கொயர் ஷேப்புகளில் வெட்டி வெண்ணெயில் போட்டு லேசாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீதம் இருக்கும் வெண்ணையில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் லேசாக வதங்கி வரும் பொழுது ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

இவற்றுடன் பூண்டு பற்களை சேர்த்து வதக்கி, ஆறு தக்காளி பழங்களை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரில் ஊற வைத்து எடுத்த முந்திரி பருப்புகளையும் சேருங்கள். முந்திரி பருப்பு சேர்த்தால் மசாலா சுவையாக இருக்கும். இவை வதங்கி வரும் பொழுது கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசம் போக பிரட்டி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் மீதம் இருக்கும் வெண்ணையை சேர்த்து காய விடுங்கள். வெண்ணை காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தேவையான அளவுக்கு மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மூடி போட்டு நன்கு வெண்ணெய் பிரிய கொதிக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சப்பாத்தி, நாண், பரோட்டா இட்லி தோசை இதற்கெல்லாம் தொட்டு சாப்பிட நல்ல கெட்டியான தக்காளி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். இதனுடைய வாசமும் சுவையும் அவ்வளவு அசத்தலாக இருக்கும்.

வெண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு நீங்கள் பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து நான்கு நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். பன்னீரை சேர்த்ததும் அதிகம் வேகக் கூடாது. கரண்டி படாமல் கிண்டி விட வேண்டும், இல்லையென்றால் உடைந்து விடும் வாய்ப்பு உண்டு. கடைசியாக கஸ்தூரி மேத்தி அல்லது நறுக்கிய மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -