சட்டுனு 2 நிமிடத்தில் மிளகு சட்னியை செய்து விடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.

milagu-chutney

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில் மிளகும் ஒன்று. இந்த மிளகை உணவில் மிக குறைவான அளவில் சேர்த்துக் கொடுக்கின்றான். சிலபேர் பொங்கலில் மிளகை சேர்த்தால் கூட, அதை தனியாக ஒதுக்கி விட்டு சாப்பிடுவார்கள். ஆனால், மிளகை வைத்து இப்படி ஒரு சட்னியை அரைத்துப் பாருங்கள். இதன் காரமான சுவைக்கு யாருமே வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். 2 இட்லி, 2 தோசையை சேர்த்து சாப்பிடும் அளவிற்கு இந்த சட்னி சுவையாக இருக்கும். இந்த சுலபமான, சூப்பரான சட்னியை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

Milagu-1

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், மிளகு – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வெந்தயம், சீரகம் ஒரு சிட்டிகை அளவு இவை அனைத்தையும் வாசம் வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அப்படியே தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஆரட்டும்.

அடுத்தபடியாக அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, பெரிய அளவிலான பழுத்த 3 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, பச்சை வாடை முழுமையாக நீங்கும் அளவிற்கு வதக்கவேண்டும். அதாவது அந்த தக்காளி தொக்கவே மாறிவிட வேண்டும். பச்சை வாடை வந்தால் சட்னி நன்றாக இருக்காது. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே வதக்கிக் கொள்ளுங்கள்.

tomato

இப்போது இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வெங்காய சட்னி பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீர் பதத்தில் அரைத்தால் சட்னி ருசி இருக்காது.

- Advertisement -

இறுதியாக இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி, எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து, இட்லி தோசைக்கு பரிமாறி பாருங்கள். இதன் அலாதியான சுவையில் எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள், எத்தனை தோசை சாப்பிட்டீர்கள் என்று கணக்கே தெரியாது. அந்த அளவிற்கு அருமையான சுவை உள்ள ஆரோக்கியமான சட்னி இது. உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மணி நேரத்தில் இப்படி விளக்கேற்றினால் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றிய பலன் கிடைக்கும் தெரியுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.