ஆரோக்கியம் நிறைந்த மிளகு வடை ரொம்ப ஈஸியாக 4 பொருள் வைத்து எப்படி செய்வது?

milagu-vadai1_tamil
- Advertisement -

மிளகு உளுந்து வடை | Milagu ulundu vadai recipe in Tamil

பண்டிகை காலங்களில் செய்யப்படும் இந்த மிளகு வடை ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்தது மற்றும் சுவையானது ஆகும். ஒரு முறை கிரிஸ்பியாக சூப்பரான டேஸ்டி மிளகு வடை கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக நம் வீட்டிலேயே செய்து அசத்தலாமே! அனைவரும் விரும்பும் மொறு மொறு மிளகு வடை ஈசியாக வீட்டில் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உடைத்த உளுந்து – ஒரு கப், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சுக்கு – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொரிக்க கடலை எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

தோலுடன் கூடிய கருப்பு உளுந்து நிறைய சத்துக்கள் கொண்டது. இது பெரிய கடைகளில் கேட்டால் கிடைக்கும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு உடைத்த கருப்பு உளுந்து எடுத்து நன்கு கழுவி சுத்தம் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். ரொம்பவும் நைசாக அரைத்து விடாமல், ஒன்றிரண்டாக அரைத்து எடுத்தால் போதும்.

அரைத்து எடுத்த இந்த உளுந்துடன் பச்சரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு மிளகை ஒன்றிரண்டாக இடித்து சேர்க்க வேண்டும். மிளகு தான் இதில் மையின்! பின் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஒரு ஃப்ளேவர் கிடைக்க சுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்கு இடித்து பவுடர் போல சேர்க்க வேண்டும். இது ஆப்ஷனல் தான், தேவை இல்லை என்றால் விட்டுவிடலாம். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். நன்கு வடை தட்டும் அளவிற்கு கெட்டியாக மாவு இருக்க வேண்டும். இதில் தண்ணீர் எதுவுமே சேர்த்து விடக்கூடாது. உளுந்தில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது.

- Advertisement -

கெட்டியாக வடை போல தயார் செய்ததும், வாழை இலை அல்லது திக்காக இருக்கும் பாலிதின் கவர் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். தட்டை போல எவ்வளவு மெலிதாக தட்ட முடியுமோ, அந்த மாதிரி உருண்டையாக உருட்டி எடுத்து தட்டிக் கொள்ளுங்கள். பின்பு நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கடலை எண்ணெய் ஊற்றுங்கள். கடலெண்ணெய் ஊற்றி செய்யும் பொழுது இந்த மிளகு வடை ரொம்பவே ருசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வெறும் பச்சை மிளகாய் இருந்தா போதும் சூப்பரான பச்சடி ரெடி. ஆறு மாதம் ஆனா கூட இது கெட்டே போகாது. இட்லி, தோசை, சாப்பாடு என எல்லாத்துக்கும் பக்கா சைடு டிஷ்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு வடைகளாக இதே போல தட்டி மெதுவாக உள்ளே போடுங்கள். கீரை வடை எப்படி இருக்குமோ, அது போல இதுவும் சூப்பராக கிரிஸ்பியாக மொறு மொறுன்னு வெந்து வரும். ரொம்பவும் பொன்னிறமாக இருக்காது, லேசான பொன்னிறத்தில் ஹார்டாக மாற துவங்கும். அந்த சமயத்தில் எடுத்து விட வேண்டியது தான். ரொம்பவே ஆரோக்கியமான இந்த மிளகு வடை ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, மொறு மொறுன்னு கிறிஸ்பியா சூப்பரா இருக்கும். அடிக்கடி செஞ்சு தாங்கன்னு வீட்ல இருக்கிறவங்க கேட்பாங்க.

- Advertisement -