வெறும் பச்சை மிளகாய் வைத்து சூப்பரான பச்சடி ரெசிபி.

pachchaimilagai pachchadi
- Advertisement -

காரம் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பச்சை மிளகாய் தான். அந்தப் பச்சை மிளகாய் வைத்து ஒரு பச்சடி செய்வது என்றால் உடனே கண்களில் கண்ணீர் வருவது போல் தோன்றுகிறது அல்லவா. ஆனால் இது அப்படி இருக்காது நல்ல ஒரு புளிப்பு, காரம், இனிப்பு என அனைத்து சுவையும் கலந்த ஒரு அருமையான ரெசிபி தான் இந்த பச்சை மிளகாய் பச்சடி. இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பச்சை மிளகாய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 20, புளி -1 நெல்லிக்காய் அளவு, கடுகு – 1ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன், கருவேப்பிலை -1கொத்து, உப்பு -1/2 ஸ்பூன், வெல்லம் -1 டீஸ்பூன், நல்லெண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

பச்சை மிளகாய் பச்சடி செய்முறை விளக்கம்:
இந்த பச்சடி செய்ய பச்சை மிளகாய் காம்பு நீக்கிய பிறகு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுவதுமாக நறுக்காமல் மேலே பாதி மட்டும் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியில் தண்ணீர் அதிகமாகாமல் அளவாக ஊற்றி கரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து சூடானவுடன் கடுகு, வெந்தயம் இரண்டையும் சேர்த்து பொரிந்த உடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பச்சை மிளகாய் பச்சடியை தாளிக்க ஆரம்பித்து விடலாம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு அடிகனமான கடாய் வைத்து விடுங்கள். அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த பச்சை மிளகாயை ஈரம் இல்லாமல் துடைத்து எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பச்சை மிளகாய் நிறம் மாறிய பிறகு, ஊற வைத்து கரைத்த புளி தண்ணீரை இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு அரைத்து வைத்த கடுகு வெந்திய பொடி இரண்டையும் சேர்த்து ஒரு முறை கலந்து நன்றாக கொதிக்க விடுங்கள். பச்சை மிளகாய் புளித் தண்ணீருடன் வெந்து சுண்டி வர வேண்டும். அது வரையிலும் கொதிக்க வேண்டும்.

தண்ணீர் மொத்தம் வடிந்த பிறகு கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து வதக்கிய பிறகு, எண்ணெய் தனியாக சுருண்டு வரும். இந்த பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்தும் கலந்த ஒரு அருமையான பச்சை மிளகாய் பச்சடி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: 3 ஸ்பூன் ரவை இருந்தா போதும் 5 நிமிஷத்துல சட்டுனு ஒரு பாயாசம் ரெடி பண்ணலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டியான இந்த பாயசம் எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா!

இந்த பச்சடியை நன்றாக ஆற வைத்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஆறு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்குமே வைத்து சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ். அது மட்டும் இன்றி சாதத்திற்கும் இது நன்றாகவே இருக்கும்.

- Advertisement -