காலையில் எழுந்ததும் பால் காபி குடிப்பவர்கள் அதை இப்படியும் செய்தால் நீங்களும் பேரழகாகலாம் தெரியுமா? பாலும், காபி தூளும் இதெல்லாம் கூட செய்யுமா?

coffee-face-pack
- Advertisement -

முதலில் காலையில் எழுந்தவுடன் எல்லோரும் காபி குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். பாலும், காபி தூளும் கலந்த இந்த இணைப்பு உடலுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும். அன்றைய நாளை புத்துணர்வாக செயல்படுத்தக்கூடிய ஆற்றல் காபி தூளுக்கு உண்டு. இந்தப் பாலும், காபி தூளும் உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல், நம்மை வெளியேயும் அழகு படுத்துவதில் இனி செயல்பட போகிறது. பாலும், காபி தூளும் கொண்டு பேரழகாவது எப்படி? என்பதை தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

கொஞ்சம் போல் காபி குடிப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் தொடர்ந்து நிறைய கப்பு காபிகள் குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகி போகிறார்கள். ஒரு நாள் குடிக்க வில்லை என்றாலும் ஒரு மாதிரி விரக்தி உணர்வு ஏற்படும். குடித்தால் தான் திருப்தி ஏற்படும் என்கிற இந்த உணர்வை கொடுக்கக் கூடியது காபியில் இருக்கும் கஃபைன் மூலக்கூறு ஆகும். இது ஒரு போதை தரக்கூடிய அம்சமாக விளங்குகிறது. காபியில் இருக்கும் இந்த கஃபைன் என்கிற மூலக்கூறு சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது.

- Advertisement -

அதே போல பாலில் இருக்கும் மூலக்கூறுகள் நம் முகத்தை மாசு, மருக்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறீர்களோ இல்லையோ ஒரு ஸ்பூன் காபி பொடியுடன், அரை ஸ்பூன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். காபி எல்லாம் குடித்து முடித்த பின்பு நீங்கள் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பட்டு போல ஜொலிப்பதை நீங்களே உணரலாம். இதில் இருக்கும் சத்துக்கள் முகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

அதன் பிறகு நீங்கள் குளிக்க செல்லும் பொழுது எப்பொழுதும் சோப்பிற்கு பதிலாக முகத்திற்கு கடலை மாவை பயன்படுத்தி குளிப்பது நல்லது. இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை விரைவாக வெளியேற்றும். இதனால் புதிய செல்கள் உருவாகி முகத்தில் பருக்கள் உருவாவதை தடுக்கிறது. மேலும் மாசுக்கள், தூசுகள் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது. சருமத்தில் இருக்கும் துளைகள் அடைந்து இறுக்கமாகி முகம் எப்பொழுதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

- Advertisement -

எப்பொழுதும் முகத்தை வறட்சியாக இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். முகம் வறட்சி அடைய ஆரம்பித்தால் அழகும் மங்கிவிடும். தினமும் இது போல செய்ய முடியாவிட்டால், வாரம் ஒரு முறை பாலும், காபி தூளும் சேர்த்து இது போல பேக் போட்டு முகத்தை அலம்பி வந்தால் விரைவிலேயே மங்கிய முகம் நல்ல ஒரு பொலிவு தரும். நம்முடைய முகமா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வியப்பாக இருக்கும்.

பாலும், காபி தூளும் குடிப்பதற்கு மட்டுமல்ல, இனி நம் முகத்தையும் ஜொலிக்க செய்ய போகிறது. முகத்திற்கு எப்பொழுதும் செயற்கையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இயற்கையான பொருட்களைக் கொண்டே பராமரிக்க வேண்டும். இதனால் தற்காலிகமாக உங்களுடைய முகம் அழகாக இல்லாமல், நிரந்தரமாக உங்களுடைய இளமையையும், அழகையும், தோற்றம் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -