- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பால் குல்பி ரெசிபி

பால் குல்பி ரெசிபி

- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு குல்பி ஐஸ் சாப்பிட யாருக்குத் தான் கசக்கும்? ஆனால் அதை நாமே வீட்டில் தயார் செய்து சாப்பிடுவதற்கு தான் நமக்கு வலிக்கிறது. கடையில் வாங்கும் குல்பியை விட வீட்டில் நாமே தரமான குல்பி ஐஸ் ரொம்ப சுலபமாக பாலை வைத்து எப்படி தயார் செய்யப் போகிறோம்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே விரும்பும் குல்பி ஐஸ் வீட்டில் எளிமையாக நாமும் தயாரிக்கும் முறையை தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவில் இனி பகிர்ந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் குல்பி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள் :
பால் – 1 லிட்டர் (Full cream milk)
சீனி – 1/2 கப் (விருப்பத்திற்கு ஏற்ப)
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
பிஸ்தா, பாதாம், முந்திரி – சிறிய துண்டுகளாக நறுக்கியது (விருப்பப்படி)

- Advertisement -

வீட்டில் குல்பி ஐஸ் செய்முறை விளக்கம் :
வீட்டிலேயே குல்பி ஐஸ் செய்வதற்கு முதலில் ஒரு ஃபுல் கிரீம் மில்க் பாக்கெட் ஒன்றை ஒரு லிட்டர் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிகனமான சுத்தமான பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி கொதிக்க விடுங்கள். பால் நன்கு கொதித்து பாதி அளவிற்கு சுண்டி கெட்டியாக வர வேண்டும். அந்த அளவிற்கு பாலை கொதிக்க வைத்து அடிப்பிடிக்காமல் அவ்வப்பொழுது கிண்டிக் கொண்டே இருங்கள். இதற்கு 20 லிருந்து 30 நிமிடம் வரை நேரம் எடுக்கும்.

பால் கெட்டியாக திரண்டு வந்ததும், அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கரைய விடுங்கள். சர்க்கரை சேர்த்த பின் உங்கள் விருப்பப்படி சுவை பார்த்து கூடுதலாக தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் கொதிக்க விடுங்கள். இரண்டு நிமிடம் கொதித்து கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை தூவி ஒருமுறை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

குல்பி ஐஸ் பாலை வைத்து செய்தாலும், அதில் சேர்க்கப்படும் நட்ஸ் வகைகளுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. ஹெல்தியான குல்ஃபிக்கு அதிகப்படியான நட்ஸ் வகைகளை சேர்ப்பது முக்கியம். இவை நன்கு ஆறியதும் குல்பி மோல்டுகளில் ஊற்றி வைக்கலாம். பால் சூடாக கொஞ்சம் கூட இருக்கக் கூடாது, நன்கு குளிர்ந்து இருக்க வேண்டும். குல்பி மோல்ட் இல்லாதவர்கள் சிறு சிறு டம்ளர்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் ஊற்றி அதில் ஐஸ் குச்சியை சொருகி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ

இதை அப்படியே ஃப்ரீசரில் கொண்டு போய் வையுங்கள். ஒரு இரவு முழுவதும் ஃப்ரீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் குல்பி ஐஸ் தயாராகும். எட்டில் இருந்து பத்து மணி நேரம் வரை குல்பி ஐஸ் ஃப்ரீஸ் செய்து வைத்தால் தான் சாப்பிடும் பொழுது கரையாமல் கெட்டியாக இருக்கும். அவ்வளவுதான் இப்பொழுது வீட்டிலேயே ஹெல்தியான தரமான குல்ஃபி ஐஸ் நாம் தயாரித்து ஃப்ரீசரில் வெச்சாச்சு! பிறகு என்ன? இந்த சம்மர் சீசனுக்கு குழந்தைகளுக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிட்டு மகிழலாமே!

சற்று முன்