அரிசி சேர்க்காமல், ஆரோக்கியம் தரும் இந்த 4 பொருட்களை சேர்த்து ஒருவாட்டி அடை தோசை சுட்டு பாருங்கள்! வித்தியாசமான ரெசிபி உங்களுக்காக.

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை வைத்து ஒரு அடை தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அரிசி சேர்க்காத புதுவிதமான இந்த அடை தோசை நாவிற்கு சுவையையும் தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவையான சத்தை கொடுக்கும் அடை தோசையை எப்படி செய்வது இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

adai

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கொள்ளு – 1 கப், திணை – 1 கப், உளுந்து – 1/2 கப், அவல் – 1 கப், இவர்களை மொத்தமாக போட்டு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கழுவிய பின்பு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த தானியங்களை கழுவிய பின்பு, தானியங்களோடு தேவைப்பட்டால், வர மிளகாய் – 4, தனியா – 1 டேபிள்ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், இவைகளை சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்களெல்லாம் ஊறிய பின்பு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 1/4 கப் தயிரை இந்த மாவோடு சேர்த்துக் கொள்ளலாம். தயிர் சேர்த்தாலும், சேர்க்கப் படவில்லை என்றாலும்,  மாவு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை புளிக்க வேண்டும்.

kollu

புளித்த இந்த மாவோடு சிறிய தாலிப்பனை போட்டுக்கொள்ளலாம். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கடுகு, பெருங்காயம் ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டி நன்றாக கலந்து விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு தோசைக்கல்லில் அடை தோசை போல வார்த்து சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும்.

- Advertisement -

(மாவு அடை மாவு போல கெட்டியாக இருக்கக்கூடாது. சாதாரணமாக தோசை ஊற்றுவது போல தண்ணீர் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.) உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அடை தோசையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் கூட, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

aval

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையை தாராளமாக சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோசைக்கு சைட் டிஷ் ஆக புதினா சட்னி, காரச் சட்னி, தேங்காய் சட்னி எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தொழில் நஷ்டம், ஏமாற்றம் அடைந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் நல்ல முன்னேற்றம் உடனே உண்டாகும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.