தொழில் நஷ்டம், ஏமாற்றம் அடைந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் நல்ல முன்னேற்றம் உடனே உண்டாகும்.

panjami-devi-panja-boothangal
- Advertisement -

பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவைகள் இருக்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல் மற்றும் நம் வருமானத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. பஞ்ச பூதங்கள் இல்லை என்றால் உலகமே இல்லை என்பது தான் பொருளாகும். எனில் நம்மை பொறுத்தவரை பஞ்சபூதங்கள் என்பது தெய்வீக சக்தியாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய இந்த பஞ்ச பூதங்கள் தோஷங்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

panja bootham

பஞ்சபூதங்களால் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் நாம் சந்தித்து தான் ஆக வேண்டும் என்பது விதி. இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்பவர்கள் அதாவது இந்த 5 வகையான விஷயம் சார்ந்த தொழில்களை செய்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. அது போல் பஞ்ச பூதங்களால் தோஷம் உள்ளவர்களும், ஆபத்துகள் ஏற்படுவர்களுக்கும் இந்த பரிகாரம் சிறந்ததாக இருக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு நிலம் விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் காரர்கள் போன்று ஒவ்வொரு சக்தியையும் அடிப்படையாகக் கொண்டு பிரதானமாக தொழில் செய்பவர்கள் பஞ்சபூதத்தினால் உடல் உபாதைகளை அனுபவித்து வருபவர்களும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகள் தீரும். பஞ்சபூத சக்தியாக பஞ்சமி தேவி ஆட்சி செய்கிறாள். பஞ்ச பூதங்களின் சக்திகள் கிடைக்க, நம்மை எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு பலம் பெற இந்த பரிகாரத்தை செய்யலாம்.

panjami-devi

பவுர்ணமி, அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளில் வரும் திதியாக பஞ்சமி திதி இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த பஞ்சமி திதியில் குத்துவிளக்கு பூஜை செய்ய வேண்டும். மிகவும் எளிமையான பரிகாரம் தான். இந்த நாளில் ஐந்து முகங்கள் கொண்ட குத்துவிளக்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து வகையான தீப எண்ணெய்களை கலந்து ஊற்றிக் கொள்ள வேண்டும். ஐந்து முகத்திலும் திரி இட்டு கீழ்வரும் மந்திரத்தை 108 முறை சொல்லி வணங்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
‘ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ!!’

panjami devi

பஞ்சமி தேவிக்கு நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு அல்லது பழ வகைகளை வைக்கலாம். உங்களிடம் எதுவும் இல்லை இல்லை என்றால் சர்க்கரையை கூட நிவேதனமாக வைக்கலாம். இந்த பரிகாரத்தை பிரம்மமுகூர்த்தத்தில் செய்வது மேலும் சிறப்பானது என்றாலும் உங்களால் முடிந்த போது நீங்கள் செய்யலாம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் பொழுது கீழ்வரும் மந்திரத்தை 16 முறை உச்சரிப்பதன் மூலம் தோஷங்கள் விலகுவதாக ஐதீகம் உள்ளது.

- Advertisement -

மந்திரம்:
பஞ்சபூதத்திக் தேவகா!!

panjabootham

பஞ்சபூதங்களை நம்பி தொழில் செய்பவர்கள், தொழில்ரீதியாக ஏமாற்றமடைந்து இருந்தால் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடிவிட்டு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து தீபமேற்றி வழிபட துன்பங்கள் அகலும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பஞ்சபூதங்களும் உங்களுக்கு சாதகமாக மாறி விடும். பஞ்சபூத சக்தியைப் பெறவும், பஞ்சபூத தோஷங்கள் விலகவும், தொழில் சிறக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யலாம். இந்த பூஜையைச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் செய்வது சிறப்பானது.

இதையும் படிக்கலாமே
தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -