சேட் ஐட்டங்களுடன் கொடுக்கும் க்ரீன் புதினா சட்னி வீட்டிலேயே எப்படி 5 நிமிடத்தில் ஈசியாக தயாரிப்பது தெரியுமா? எதையும் வதக்க வேண்டாம் மிக்ஸியில் அரைத்தாலே போதுமே!

green-mint-chutney1_tamil
- Advertisement -

கிரீன் சட்னி என்று கூறப்படும் இந்த பச்சை புதினா சட்னி தயாரிப்பதற்கு மிக்சி இருந்தால் போதும், எதையும் நாம் போட்டு வதக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதினா சட்னி சாட் ஐட்டங்களுடன் வைத்து சாப்பிடுவது வழக்கம். ஸ்னாக்ஸ், சாண்ட்விச் போன்றவற்றுடன் சைட் டிஷ் ஆக கொடுக்கப்படும் இந்த மின்ட் சட்னி எப்படி எளிதாக நம் வீட்டிலேயே ஐந்து நிமிடத்தில் அரைத்து எடுப்பது? இதில் சேர்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – ரெண்டு கப், மல்லி இலைகள் – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – பாதி, இஞ்சி – அரை இன்ச், உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
புதினா சட்னி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவிற்கு தாராளமாக வருமாறு புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைப்பிடி அளவிற்கு வருமாறு கை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதே போல மல்லி தழைகளையும் அலசி சுத்தம் செய்து ஒரு கப் வரும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புதினா இலைகள் மற்றும் மல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பாதி அளவிற்கு பெரிய வெங்காயத்தை தோலுரித்து வெட்டி பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். வெங்காயம் அதிகம் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, இது ஆப்ஷனல் தான். வேண்டாம் என்றால் தவிர்த்து விடலாம். பின்னர் இதனுடன் காரத்திற்கு நான்கு பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அரை இன்ச் அளவிற்கு இஞ்சி தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். ஒரு விதமான காரம் மற்றும் இனிப்பு சுவையை தரக்கூடிய இந்த மின்ட் சட்னி பச்சையாக அப்படியே தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கும். சமோசா, பஜ்ஜி, போண்டா, கிரில் சிக்கன், தந்தூரி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிடும் பொழுது ஆஹா! என்று ரசித்துக் கொண்டே சாப்பிடலாம். டொமேட்டோ சாஸ் எந்த அளவிற்கு மக்களால் விரும்பப்படுகிறதோ, அதே அளவிற்கு இந்த புதினா சட்னியும் அனைவரின் ஃபேவரட் ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு மட்டும் இந்த பூரி உப்பலாவே வரமாட்டேங்குதா? காலையில் சுட்ட பூரி இரவு வரைக்கும் கூட அப்படியே இருக்க, இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டா போதும்.அப்புறம் பூரி சுடுவதில் நீங்க தான் மாஸ்டர்.

இதனுடன் கடைசியாக ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு விதைகள் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மிக்ஸியை மூடி ஒரு சுற்றி சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி இப்பொழுது மீண்டும் சுற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதாங்க, ரொம்பவே பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கக் கூடிய இந்த கிரீன் சட்னி சாப்பிடுவதற்கும் அசத்தலாக இருக்கும். இனி கடைகளில் கிரீன் சட்னி வாங்க முடியலன்னா, சட்டுனு நீங்களே அரைச்சு சாப்பிடலாமே!

- Advertisement -