உங்களுக்கு மட்டும் இந்த பூரி உப்பலாவே வரமாட்டேங்குதா? காலையில் சுட்ட பூரி இரவு வரைக்கும் கூட அப்படியே இருக்க, இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டா போதும்.அப்புறம் பூரி சுடுவதில் நீங்க தான் மாஸ்டர்.

- Advertisement -

இந்தப் பூரியை மட்டும் நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஒன்று சரியாக வரத்து அல்லது எண்ணெய் அதிகம் குடித்து விடும். கடைகளில் கிடைக்கும் பூரி சாஃப்ட் ஆகவும், அதே நேரத்தில் உப்பலாகவும், பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். இதை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவல் தோன்றும். வீட்டில் நாம் செய்யும் போது சுட்டு எடுக்கும் போது தான் அப்படி இருக்குமே தவிர எடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் பூரி பூரியாக இருக்காது. இன்னும் சிலருக்கோ பூரி எப்படி சுட்டாலும் முப்பதாக வரவே செய்யாது. ஹோட்டல்களில் செய்யப்படும் பூரியை போல நீங்கள் வீட்டிலும் செய்ய வேண்டுமென்றால், சின்ன சின்ன விஷயங்களை மட்டும் பூரி செய்யும்போது நீங்கள் கடைபிடித்தால் போதும் அதே ஹோட்டல் ஸ்டைல் பூரி உங்களுக்கு வீட்டிலும் செய்து விடலாம் அது என்னவென்று இந்த குறிப்பு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2கப், ரவை -11/2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம், உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் -1 கப். தேவையான பொருட்களில் தண்ணீர் எல்லாம் கூடவா சேர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம் பூரி பிசைய தண்ணீரின் அளவு மிக மிக முக்கியம்.

- Advertisement -

இந்த பூரிக்கு மாவு பிசைய முதலில் கோதுமை மாவை ஒரு பவுலில் கொட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு, ரவை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள். தண்ணீர் ஊற்றிய பிறகு எண்ணெய் ஊற்றக் கூடாது எண்ணெய் முதலிலேயே ஊற்றி விடுங்கள். இப்போது ஒரு கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளுங்கள். இந்த ஒரு கப் தண்ணீர் இரண்டு கப் மாவிற்கு சரியாக இருக்கும் போதவில்லை என்றால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். மாவின் பதம் சப்பாத்தி மாவின் பதத்தை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் படி பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்த இந்த மாவின் மீது மெல்லிய ஈரத்துணி போட்டு மூடி வைத்து விடுங்கள். இது அப்படியே ஒரு அரை மணி நேரம் இருக்கட்டும் கோதுமை சப்பாத்தி என எது செய்தாலும் மாவு இந்த அரை மணி நேரம் கட்டாயமாக ஊற வேண்டும். அப்போது தான் கோதுமையில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும். பூரியும் உப்பலாக இருப்பதுடன் நல்ல சாஃப்ட் ஆகவும் கிடைக்கும்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து கோதுமை மாவை எடுத்து உங்களுக்கு தேவையான அளவிற்கு சின்ன சின்ன துண்டுகளாக கத்தி வைத்து நறுக்கி எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பவுலின் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மாவு அனைத்தையும் ஒன்றாக திரட்டி ஒரு நிமிடம் மறுபடியும் ஈரத்துணி போட்டு வைத்து விடுங்கள் இது மாவு சாப்பிட்டாக இருக்கும் அதே நேரம் பூரி நல்ல உப்பலாக வரவும் உதவி செய்யும்.

பூரிக்கு மாவு திரட்டும் போது மாவை தொட்டு திரட்ட கூடாது அப்படி செய்தால் எண்ணெய் கருத்து விடும். அதனால் பூரியின் ருசியும் மாறிவிடும் அந்த எண்ணெய் மறுபடி பயன்படுத்தும் முடியாது.

இதையும் படிக்கலாமே: அடை செய்ய இனி பருப்புயெல்லாம் தேவையே இல்ல, ஜவ்வரிசி இருந்தா போதும் அத வச்சு ரொம்ப சிம்பிளா இந்த அடை செய்திடலாம். ரொம்ப சூப்பரா, டேஸ்ட் வேற லெவெல்ல இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

இப்பொழுது ஊறிய மாவை எடுத்து பூரி மிகவும் மெலிதாக ஓடு போல் தட்ட வேண்டாம். அதே நேரத்திற்கு சப்பாத்தி மாவு போடும் இல்லாமல் ஓரளவுக்கு மீடியமாக மாவை திரட்டி எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் ஒரு ஒரு பூரியாக போட்டு எடுங்கள். பூரியை போட்டவுடன் முதலில் உள்ளே சென்று லேசாக மேலே வரும் போது கரண்டியை வைத்து லேசாக அழுத்தினால் போதும் பூரி நன்றாக உப்பி வரும். அவ்வளவு தான் இரண்டு புறமும் திருப்பி போட்டு எடுத்து வைத்து விடுங்கள். இந்த பூரி அரை நாள் ஆனாலும் அப்போது சுட்ட பூரி போலவே உப்பலாகவே இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -