லிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம்

Siva Lingam
- Advertisement -

“சிவாய நம என்றிருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை” என்பது நம் சைவத் தமிழ் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்த நம் ஆன்றோர்கள் அனுபவப்பூர்வமான வாக்காகும். சிவபெருமானை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. இல்லறவாசியாக இவர் இருந்தாலும், தோலாடை உடுத்திக்கொண்டு பெரும்பாலும் சித்தர்கள், யோகிகள், பூதகணங்களோடு இருப்பார். தீயவர்களை அழிக்கும் போது “ருத்ரனாகவும்”, தன் மீது உண்மை பக்திகொண்டிருக்கும் பக்தர்களுக்கு “தாயாகவும்” மாறக்கூடியவர். தன் பக்தர்களுக்கு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தனது இருப்பை காட்டிக்கொண்டே இருக்கிறார். அத்தகைய ஒரு காணொளியை இங்கு காணலாம்.

வட இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு சிவன் கோவிலில் இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்காணொளியை சற்று கூர்ந்து கவனித்தால் சிவலிங்கத்தின் மீது நீர் ஊற்றப்படும் போது “ஓம்” என்கிற சமஸ்கிருத ஓம்கார எழுத்து தெரிவதும், அந்நீர் காய்ந்த பின்பு அதைக் காண முடியாததையும், மீண்டும் தண்ணீர் ஊற்றப்படும் போது அந்த ஓம்கார எழுத்து தெரிவதைக் காண முடிகிறது. இதைப்பார்த்து அங்கிருக்கும் பக்தர்கள் சிவனின் மகிமையைக் கண்டு அவரின் புகழ் பாடுகின்றனர். இப்படிப்பட்ட அதிசயக் காட்சிகளைக் காணும் மற்றவர்களுக்கும் அந்த சிவபெருமான் மீது மேன்மேலும் பக்தி பெருகுவது நிச்சயம்.

- Advertisement -
- Advertisement -