மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்

பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் விண்ணில் இருந்தாலும் மனிதர்களின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை தாக்கத்தை உண்டாக்குபவையாக இருப்பது 27 நட்சத்திரங்கள் மட்டுமே ஆகும். இந்த நத்திரங்களின் வரிசையில் வீரம் மற்றும் விவேகம் ஆகிய இரண்டும் ஒன்று கலந்த குணத்தை கொண்டிருக்கும் “மிருகசீரிடம்” நட்சத்திரம் பற்றியும் அந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

chevvai

27 நட்சத்திரங்கள் வரிசையில் ஐந்தாவதாக வரும் நட்சத்திரம் மிருகசீரிடம் நட்சத்திரம் ஆகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக சந்திர பகவான் இருக்கிறார். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களை மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் பல சீறுகளையும், சிறப்புகளையும் பெறுவதற்கு கீழ்க்கண்ட பரிகாரகங்களை செய்து வருவது நல்லது.

எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் இருக்கும் . இதில் ஒரு சில நட்சத்திரங்களுக்கு ஒரே ராசியில் நான்கு பாதங்கள் அமைந்திருக்கும். வேறு சில நட்சத்திரங்களுக்கு ஒரு ராசியில் இரண்டு பாதங்களும் மற்றொரு ராசியில் இரண்டு பாதங்களும் அமைந்திருக்கும். அப்படியான நட்சத்திரங்களில் மிருகசீரிடம் நட்சத்திரமும் ஒன்று. இந்நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், மற்ற இரு பாதங்கள் மிதுனம் ராசியிலும் வருகிறது.

kantha sasti kavasam lyrics

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி, பழம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வருவது அவர்களின் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தும். அதே வெள்ளிக்கிழமையில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியம் செய்து, தீபமேற்றி வழிபட வேண்டும். வேதபாராயணங்கள் செய்யும் திருமணமாகாத ஒரு இளம் பிராமணருக்கு புது வேட்டி துணியை தானம் அளிப்பது உங்களின் தோஷங்களை போக்கும்.

- Advertisement -

மிருகசீரிட நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாய்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் கிருத்திகை, சஷ்டி தினங்களில் முருகப்பெருமானின் கோயில்களுக்கு சென்று முருகனுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் பல நல்ல ஏற்றங்களை காணலாம். பள்ளி மாணவர்களுக்கு சிவப்பு நிற பேனாக்கள், பென்சில்கள் போன்றவற்றை தானமாக தருவது நன்மையை தரும்.

இதையும் படிக்கலாமே:
வளைகாப்பு சடங்கு செய்யும் சரியான முறை

இது பன்னிரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mirugasiridam natchathiram pariharam in Tamil. It is also called Mirugasiridam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Chevvai bhagavan natchathirangal in Tamil or Mirugasirida natchathira padhangal in Tamil.