வளைகாப்பு சடங்கு சிறப்பாக செய்யும் முறை

மிகப்பழமையான இந்து மதத்தின் பல விடயங்கள் மனிதனின் வாழ்வோடு ஒன்றிய ஒரு விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை 41 முக்கியமான சடங்குகளை செய்ய வேண்டும் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அதில் ஒன்று தான் குடும்பத்தின் எதிர்கால சந்ததியை கருவில் சுமக்கும் பெண்ணிற்கு நடத்தப்படும் “வளைகாப்பு” சடங்காகும். இந்த வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் குறித்தும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

வளைகாப்பு சடங்கு” என்பது நமது முன்னோர்கள் வகுத்த ஒரு அறிவியல் பூர்வமான சடங்காகும். ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயங்கள் மனஅழுத்தங்கள் நீங்கி அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இச்சடங்கின் போது பல சத்துமிக்க தானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகள் அக்கர்ப்பிணி பெண்ணுக்கும், அதன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் போஷாக்கு அளிக்க கூடியதாகவும் இருக்கிறது.

நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை” தத்துவப்படி பெண்களின் இரண்டு கைகளின் அணிவிக்கப்படும் வளையல்களால் கைகளில் இருக்கின்ற வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பெற்று பெண்ணுக்கும், பிறக்க போகின்ற குழந்தைக்கும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் 7 அல்லது 9 மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்கிற நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை நவீன மேலை நாட்டு அறிவியல் ஆய்வாளர்களும் உண்மை என்பதை தங்களின் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த வளைகாப்பு சடங்கை செய்யும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

வளைகாப்பு என்பது பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்களின் 7 அல்லது 9 மாதத்தில் ஒரு முகூர்த்த தேதியில் சுப முகூர்த்த நேரத்தில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த தினத்தில் கர்ப்பிணி பெண்கள் புதிய பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, உறவினர் பெண்களால் நன்கு அலங்கரித்து வளைகாப்பு சடங்கு நடத்தும் இடத்தில், அப்பெண்ணின் கணவரோடு அமரவைக்கப்பட வேண்டும்.

- Advertisement -

இரண்டு குத்து விளக்கில் தீபமேற்றி, பல்வேறு வகையான வாசம்மிக்க பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி , வளையல் சீர்வரிசை போன்றவை வைக்கப்பட்டு, கேசரி, சாம்பார் சாதம், தேங்காய் சாதம் போன்ற பல வகையான சித்ரா அன்னங்களும் படைக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்பு, முகூர்த்த நேரத்தில் வளைகாப்பு நடத்தப்படும் பெண்ணக்கு உரிய தாய்மாமன் அனைத்து கெடுதல்களும் நீங்குவதாக கருதி தேங்காய் உடைக்க வேண்டும்.

இதன் பின்னர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருவுற்ற பெண்ணின் கணவர் அப்பெண்ணுக்கு மாலை அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, இரு கைகளிலும், கன்னங்களிலும் சந்தனத்தை நலுங்கு பூச வேண்டும். பின்பு இரு கைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து தனது மனைவியையும், கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்துவர்.

இதற்கு பின்னர் அனைத்து உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து, சந்தனம் நலுங்கு வைத்து, குங்குமம் இட்டு பன்னீர் தெளித்து, அறுகரிசி படைத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும். இறுதியில் வயதான சுமங்கலி பெண்கள் வளைகாப்பு முடிந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்து போட வேண்டும். இதன் பின்பு நிகழ்ச்சி வந்திருக்கும் உறவினர்கள் வளைகாப்பு நடந்த பெண்ணிற்கு பல பரிசுகளை தந்து அப்பெண்ணை ஆசிர்வதிப்பதால் அப்பெண்ணிற்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தி தாய்க்கும் கருவில் வளருகின்ற சேய்க்கும் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே:
வெளிநாடு வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Valaikappu procedure in Tamil. it is also Valaikappu murai Tamil or Valaikappu seivathu eppadi in Tamil or Valaikappu seimurai in Tamil or Valaikappu eppadi seivadhu or Valaikappu vizha in Tamil.