கோலி ஓய்வுக்கு தயாரா.? சீண்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.!

vira

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (26-12-2018) துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது.இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 215 ரன்களை குவித்து உள்ளது. விராட் கோலி 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

koli 2

தற்போது இந்திய அணியின் விராட் கோலியை குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சை பதிவினை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: கோலி தொடர்ந்து சதங்களை விளாசி வருவதாக கூறுகிறீர்கள்.மெல்போர்ன் ஆடுகளத்தில் அவர் சதம் அடிக்க இயலவில்லை என்றால் ஓய்வு பெற தயாரா என்று வம்பிழுக்கும் வகையில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

johnson

இதையும் படிக்கலாமே:
ஆஸ்திரேலிய மண்ணில் கோலிக்கு கிடைத்த ஆதரவு. அசந்து போன எதிர் அணி வீரர்கள்

இதனை இந்திய ரசிகர்கள் தொடர்ந்து வசை பாடிய வண்ணம் தங்களது கருத்துகளை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கும் அந்த நாட்டு ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களை சீண்டுவதே வேலை என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என்றும் ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்