இத வைச்சு உங்க மிக்ஸியை சுத்தம் செய்யலாம்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டிங்க. இப்படி மட்டும் மிக்ஸிய சுத்தம் செய்து பாருங்க பழைய மிக்ஸிக்கும், புது மிக்ஸிக்கும் வித்தியாசமே தெரியாது

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மிக்ஸி கட்டாயம் இருக்கும். மிக்ஸி இல்லாமல் நமக்கு ஒரு வேலையும் ஓடாது எனும் அளவிற்கு இன்றையமையாத ஒரு பொருளாக மிக்ஸி ஆகி விட்டது. அதனாலேயே இந்த மிக்சியை நாம் பார்த்து பராமரித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அது இல்லாமல் போனால் அவதி பட போவதும் நாம் தானே, இந்த மிக்ஸியை சுத்தமாக பராமரிக்க ஒரு எளிமையான குறிப்பை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மிக்ஸியை நாம் தினமும் பயன்படுத்துவதால் அதை நீங்கள் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டியது இருக்கும். மிக்சியை சுற்றி எண்ணெய் பிசுக்கு போன்றவை படிந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கும் இப்படி அழுக்கு படிந்த மிக்ஸியை கூட எளிமையாக நொடியில் சுத்தம் செய்ய ஒரு அருமையான வழி இருக்கிறது.

- Advertisement -

மிக்ஸி ஜார் பொருத்தும் அந்த இடம் தான் மிக்ஸியில் அதிகம் அழுக்கு சேரும். அதை சுத்தம் செய்ய கொஞ்சம் கடினமாகவே இருக்கும், அதற்கு நீங்கள் கட்டாயம் டூத் பிரஷ் வைத்து தான் சுத்தப்படுத்த வேண்டும். மிக்ஸியை சுத்தப்படுத்தும் போது டூத் பிரஷை லேசாக வளைத்து உள்ளே வைத்து சுத்தம் செய்தால் அழுக்குகள் இன்னும் சுலபமாக வந்து விடும். இப்போது அதில் படியும் இந்த எண்ணெய் கறையை நீக்க நமக்கு தேவையான பொருளும் எண்ணெய் தான்.

ஆச்சரியமாக இருக்கிறதா எண்ணெய் கறையை எப்படி எண்ணெய் போக்கும். ஆமாம் மிக்ஸி ஜார் பொருத்தும் அந்த இடத்தில் இருக்கும் எண்ணெய் கறையை நீக்க ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி வைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து பிரஷ் வைத்து லேசாக தேய்த்து விட்டு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து பாருங்கள் புதிதாக வாங்கிய மிக்ஸிக்கும், இதற்கும் வித்தியாசமே தெரியாது. மிக்ஸியை சுற்றி எங்கே எண்ணெய் கறை இருந்தாலும் இதே முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக மிக்ஸி ஜாரின் பின் புறம் சுத்தம் செய்வதற்கு ஜாரின் பின் பகுதியில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு பிறகு அதில் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றினால் நுரை போல பொங்கி வரும். இந்த நுரை அடங்கியவுடன் இதிலும் பிரஷ் கொண்டு தேய்த்து எடுத்த பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள் ஜார் பளிச்சென்று மாறிவிடும்.

அதே போல் மிக்ஸி ஜார் பிளேட் அரைப்படாமல் மொக்கையாக இருந்தால், ஜாரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு மிக்சியை ஒரு முறை ஒட விட்டு எடுத்தால் போதும் பிளேடு நல்ல ஷார்ப்பாக மாறி விடும். கல் உப்பிற்கு பதிலாக முட்டை ஓடும் போடலாம். உங்கள் வீட்டில் பச்சரிசி இருந்தால் அதன்யுடன் கொஞ்சம் பேக்கிங் சோடா சேர்த்து அரைத்தால் கூட மிக்ஸி ஜார் ஷார்ப்பாகி விடும்.

- Advertisement -

மிக்ஸியை பயன்படுத்தும் போது அடுப்பு மேடையில் மிக்ஸியில் இருந்து சிந்தும் பொருள்கள் கொட்டி அசிங்கம் ஆகாமல் இருக்க எப்போதும் மிக்சியை ஒரு தட்டில் வைத்து பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு மிக்ஸியை நகர்த்தி வேலை செய்யவும் சுலபமாக இருக்கும். அரைக்கும் போது அதிலிருந்து சிந்தும் பொருட்கள் அடுக்களை மேடையை அசிங்கப்படுத்தாமலும் இருக்கும்.

அதே போல் மிக்ஸி ஒயரை சுற்றி வைக்க டபுள் சைட் டேப் இருந்தால் அதை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் மிக்சி ஸ்விட்ச் பாக்ஸ் இருக்கும் இடத்தில் இந்த டபுள் சைட் டேப்பை ஒட்டி விடுங்கள். அந்த டேப்பில் ஒயரை சுருட்டி ஒட்டி விட்டால் பார்க்கவும் ஒழுங்காக இருக்கும். ஒயரையும் அடிக்கடி எடுத்து சுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மிக்ஸி ஜார் மூடியில் உள்ள பெல்ட் அடிக்கடி லூசாகி மாற்ற வேண்டியது இருக்கும். இனி அப்படி மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. அந்த பெல்ட்டை சுற்றி உங்கள் வீட்டில் தலைக்கு பயன்படுத்தும் ரப்பர் பேண்டையை போட்டு விட்டால் போதும் மூடி டைட்டாக மூடும். இனி உங்கள் மிக்ஸியை சுத்தப்படுத்துவதோ பராமரித்து கொள்வது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது. இந்த குறிப்பை தெரிந்து கொண்டு இதை நீங்கள் பயன் படுத்தி பாருங்கள்.

- Advertisement -