மிக்ஸி வைத்திருப்பவர்கள் அதை இப்படி பராமரித்து பாருங்க, எப்பவும் புதுசு போலவே இருக்கும்! மிக்ஸி பற்றி தெரியாத 10 குறிப்புகள்!

tooth-paste-mixi
- Advertisement -

பொதுவாக மிக்ஸி வைத்திருப்பவர்கள் அதனை பராமரிப்பதில் சோம்பேறித்தனம் படுவார்கள். அடிக்கடி மிக்ஸியை துடைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சில எளிய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், எப்போதும் புதிது போல உங்கள் மிக்ஸி மின்னும். மேலும் மிக்ஸி நீண்ட காலம் உழைக்கக் கூடிய வழிமுறைகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக்ஸியில் முக்கியமாக நாம் ரப்பர், ஜாரின் பின்பகுதி, பிளேடு, மற்றும் மிக்ஸியை துடைக்க கடினமாக இருக்கும் பகுதிகளை கவனிக்க வேண்டும். இதனை எப்படி சுலபமாக கையாளலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

குறிப்பு 1:
உங்கள் மிக்சியின் அடியில் புஷ் போல தரையில் பிடித்துக் கொள்ள சில ரப்பர்கள் கொடுத்திருந்தால் அதனை வேகமாக பிடித்து இழுக்கும் பொழுது மிக்ஸி சில பாதிப்புகள் அடைய வாய்ப்புகள் உண்டு எனவே புஷ் உள்ளவர்கள் அடியில் ஒரு வீணாகிப் போன தட்டை வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு தேவையான இடத்தில் ஈசியாக நகர்த்தியும் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
மிக்ஸியின் ஒயரை ஏடாகூடமாக மடித்து வைக்கும் பொழுது அதுவும் மிக்ஸியை சில பாதிப்புகள் அடைய செய்யும். மேலும் நமக்கு அது இடைஞ்சல் ஆகவும் இருக்கும். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது. மிக்ஸியின் ஏதாவது ஒரு பகுதியில் மேற்புறமாக செல்லோடேப் போட்டு ரப்பர்பேண்டை ஒட்டி விடுங்கள். மிக்ஸியின் ஒயரை எப்போதும் போல வட்டமாக சுற்றி, அந்த ரப்பர் பேண்ட் ஆல் கட்டிக் கொள்ளலாம். இதனால் ஒயருக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது, உங்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்காது.

Mixi

குறிப்பு 3:
மிக்ஸி ஜாருடைய ரப்பரை அடிக்கடி கழட்டி சுத்தம் செய்யக்கூடாது. இதனால் வெகு விரைவாக ரப்பர் லூஸ் ஆகி விடும். மாதம் ஒருமுறை கழட்டி சுத்தம் செய்தால் போதும். ரப்பர் லேசாக தளர்வது போல தெரிந்தால் அதன் மேலே ஒரு ரப்பர் பேண்டை இறுக்கமாக போட்டு விடுங்கள். பொருட்கள் வெளியில் சிந்தாமல் பாதுகாப்பாக இருக்கும். ரப்பரும் சீக்கிரம் தளராது.

- Advertisement -

குறிப்பு 4:
மிக்ஸி ஜாரில் நீங்கள் அரைத்த ஏதாவது ஒரு பொருளின் வாசம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், அந்த வாசம் போகவும், விடாப்பிடியான அழுக்குகள் பிளேடுக்கு அடியில் தங்கி கொண்டிருந்தால் அவைகள் நீங்கவும் ஜாரை கழுவும் பொழுது அதில் ஏதாவது ஒரு டிஷ் வாஷ் லிக்விட் உற்றி இரண்டு சுற்று சுற்றி எடுங்கள். புத்தம் புதிய ஜார் போல பளபளன்னு மின்னும்.

mixie1

குறிப்பு 5:
மிக்ஸி ஜார் உடைய பிளேட் மழுங்கிப் போய் விட்டால் அது கூர்மை அடைய நன்கு கழுவி காய வைத்த முட்டை ஓடுகளை போட்டு நன்கு சுற்றி எடுக்கலாம் அல்லது கல் உப்பை போட்டும் சுற்றி எடுத்தால் பிளேடு எளிதாக கூர்மை அடைந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 6:
மிக்ஸி எப்பொழுதும் புத்தம் புதியதாக இருக்க ஏதாவது சிந்தினால் சுலபமாக துடைக்க மிக்ஸிக்கு ஏற்றபடி ஒரு கவர் போட்டு வைக்கலாம். சிறு குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை மாட்டி வைத்தால் சரியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க. அதை வாரம் ஒருமுறை துவைத்தால் போதுமே!

mixie2

குறிப்பு 7:
மிக்ஸி ஜார் உடைய பின் பகுதியில் அதிகம் விடாப்பிடியான அழுக்குகள் தேங்கி இருந்தால், அரை மூடி எலுமிச்சம் பழத்தை விட்டு அதன் மீது ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை தூவி பாருங்கள், நுரை போல பொங்கி வரும். அப்படியே அரை மணி நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரண டூத் பிரஷ் கொண்டு லேசாகத் தேய்த்து எடுத்தால் எல்லா அழுக்குகளும் சூப்பராக வந்து விடும்.

குறிப்பு 8:
மிக்ஸி ஜாரின் உட்புற அழுக்குகளை நீக்க நாலைந்து எலுமிச்சை பழத் தோல்களை கத்தரித்து போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுற்றி எடுத்தால் அழுக்கு கிருமிகள் நீங்கி, வாசமும் சூப்பராக இருக்கும்.

tooth-brush-holder

குறிப்பு 9:
மிக்ஸி ஜாரை மிக்ஸியில் மாட்டும் இடத்தை சுத்தம் செய்வது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதற்கு ஒரு பழைய டூத் பிரஷ் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கழுத்து பகுதியை இலேசாக நெருப்பில் காட்டி பின்புறமாக வளைத்து கொள்ளுங்கள். இப்போது இந்த பிரஷ்ஷை வைத்து வட்ட வடிவில் இருக்கும் அந்த இடத்தை நன்கு தேய்த்தால் அழுக்குகள் சுலபமாக நீங்கிவிடும்.

paste

குறிப்பு 10:
மோட்டார் சுற்றும் பொழுது காற்று வெளியில் போவதற்கு நீள நீளமாக ஓட்டைகள் கொடுத்திருப்பார்கள். அதில் இருக்கும் அழுக்குகளை நீக்கவும் காய்ந்த டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம். மேலும் சோப் போட்டு மிக்ஸியை துடைக்காமல், டூத் பேஸ்டை கொஞ்சம் சுத்தமான காட்டன் துணியில் வைத்து துடைத்துப் பாருங்கள் மிக்ஸி புதிது போல மின்னும்.

- Advertisement -